பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

முதல் (மொட்டை) முடி சைவப் பதியாகிய வைத்தீசுவரன் கோயிலிலும் இரண்டாவது (மொட்டை) முடி வைணவப் பதியாகிய திருவயிந்திர புரத்திலும் எடுப்பது வழக்கம். சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு (விரதம்) தோன்பு உண்டு. புரட்டாசித்திங்களில் மூன்றாம் சனிக் கிழமை பெருமாளுக்குச் சிறப்புத் தளியல் - படையல் உண்டு. அன்றைக்கு என் பிள்ளைகள் தெருவாயிற்படிக் கதவிலும் என் நெற்றியிலும் நாமம் சாத்துவார்கள். எனவே, திருப்பதி - திருமலையில் திருமால் திருமேனி இருப்பதில் தடையொன்றும் எனக்கு இல்லை. இளமையிலிருந்து யான் அறிந்து வைத்திருக்கும் உண்மையை இங்கே உரைத்தேன்-அவ்ளவுதான்! கருத்து வேற்றுமைக்காகப் பகையுணர்வு கூடாது என எதிர் தரப்பினரின் திருவடிகளில் விழுந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி, வணக்கம். நட்பு வளர்க!

      “கோவிந்த நாம சங்கீர்த்தனம்—
           கோவிந்தா கோவிந்தா!”