பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

பத்தரும் ஒரு நாள் பேசிக் கொண்டிருந்த போது கோவிந்தப் பத்தர் பின்வரும் செய்தியைக் கூறினார் : “நான் (பத்தர்) ஒரு முறை திருப்பதி மலைக்குச் சென்ற போது, கோயில் கோபுர வாயிற்படி எதிரில், சுமார், இருபது காவடிகளை அன்பர்கள் சுமந்து கொண்டு ‘முருகனுக்கு ஆரோகரா’ - என்று சொல்லிக் கொண்டே ஆடினார்கள். என்ன இது என்று பட்டாசாரியரைக் கேட்டதற்கு எங்களுக்கு இரண்டும் (முருகன், திருமால்) ஒன்று தான் என்று கூறினார். காவடி ஆடிய அன்பர்களைக் கேட்டதற்கு, எங்களுக்குப் பரம்பரையாகத் திருமலைக் கோயில் முருகன் கோயில் தான். நாங்கள் பண்டைக்கால வழக்கப்படி தொடர்ந்து காவடி கொண்டு வந்து ஆடிப் பாடுகிறோம் என்று கூறினர். மற்றும், கோயில் மதில்களின் மேல் கருடன் சிலைக்குப் பதிலாகச் சிங்கத்தின் சிலைகள் நான்கு பக்கமும் வைக்கப்பட்டுள்ளன’-இது, உயர்திரு பத்தர் கூறிய செய்தி.

சிங்கம் இருப்பது, திருமாலின் நரசிங்கப் பிறவியைக் குறிக்கும் என்று சிலர் கூறலாம். அப்படியானால், வெறுஞ் சிங்க வடிவம் இன்றி நரசிங்க வடிவம் வைத்திருக்கலாமே என்று சிலர் கேட்கலாம், இந்த ஆதாரத்தை யான் திரு. சித்தனுக்குக் கூறினேன்.

கோபாலய்யரின் குறுக்கீடு

அப்போது, எந்தச் சமயத்திலும் யாருக்கும் தரப்படாத தலைமைப் புலவர் என்னும் பட்டம், சங்கத்தாரால் தமக்குந் தரப்பெற்றுள்ள திரு. கோபாலய்யர் என்பவர் என்னைநோக்கி, சிலப்பதிகாரத்தில் திருப்பதி மலை திருமாலுக்கு உரியதாகச் சொல்லப்பட்டுள்ளது: நீங்கள்தான் சிலப்பதிகாரம் இற்றைக்கு 1800 ஆண்டு-