பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

கட்கு முற்பட்டது என்று சொல்கிறீர்களே. எனவே, அது முருகன் கோயில் என்பதற்கு வேறு இலக்கியம் சான்றுவேண்டும் என்று கேட்டார். "நீங்கள்தான் சிலப்பதிகாரம் 1800 ஆண்டுகட்கு முற்பட்டது என்று கூறுகிறீர்களே என அய்யர் குறிப்பிட்டது, நாங்கள் ஏதோ ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் போலவும், அவர் அதற்கு மாறான குழுவைச் சேர்ந்தவர் போலவும், நாங்கள் தகாததைச் சொல்வது போலவும்-எண்ணத்தக்க ஒரு பொருட்படுத்தாமைப் போக்கு (அலட்சியப் போக்கு) அவர் பேச்சில் தென்பட்டது.

அவருக்கு முன்பே சிலப்பதிகாரம் படித்திருந்த நான்-சிலப்பதிகாரத்தைப் பற்றி முப்பத்தொரு தலைப்புகளில் ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்பு எழுதி வைத்திருக்கும் நான், அதை மறுக்கவில்லை! சிலப்பதிகாரக் காலத்திற்கு முன்பு அது முருகன் கோயிலாக இருந்திருக்கலாம் அல்லவா? என்று கூறினேன். அதற்கு அய்யர். எனக்கு இலக்கிய ஆதாரம் வேண்டும் என்றார். அதற்கு நான் பின்வரும் செய்தியைக் கூறி விளக்கலானேன் அதாவது:

மூவகை வரலாறு

வரலாற்றுச் செய்திகளை அறிந்து கொள்ள உதவும் துணைக் கருவிகளைக் கொண்டு வரலாற்றை மூன்று வகையாக வரலாற்றறிஞர்கள் பிரித்து வைத்துள்ளனர். அவையாவன:-ஒன்று, பட்டப் பகலில் நடந்த வரலாறு இரண்டு, வைகறையில் தெரிந்தும் தெரியாததுமாய் இருக்கின்ற பனி மூட்டத்தில் நடந்த வரலாறு மூன்று, வெளிச்சம் சிறிதும் இல்லாத அமாவாசை நள்ளிரவில் நடந்த வரலாறு-என்பன