பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 தேசிய இயக்கம் - பாரத நாட்டுரிமை என்னும் வகையில் பொதுத் தொண்டில் ஆர்வம் கொண்ட டாக்டர் சஞ்சீவி-காலம் என்னும் ஏடு பக்கம் பக்கமாகப் புரண்ட போது-அவை எல்லாம் தாய்மொழி உரிமை-இனவழி வாழ்வு - மாநில மக்களின் தன்னாட்சித் தகுதி என்னும் பல பக்கங்கள் கொண்ட ஏட்டின் மேலட்டையே என்று தெளிந்தார் என்றே அவரை அறிந்த நான் கருதமுடியும். அவரது உள்ளம்-உண்மை நிலையை உணர உணர உணர்ச்சிப் பிழம்பாக மாறி, அநீதியையும் ஆதிக்கத்தையும் ஆணவத்தையும் எரித்து விடத் துடித்தது. அந்தத் துடிப்பின் ஒலியைத்தான்-இந்தத் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளில் கேட்கின்றோம். இலக்கியத் தலைவர்-கலைஞர்" என்னும் இத் தலைப்பு, நூலில் துவலப்படும் பொருளுக்கு ஏற்புடையது மட்டுமின்றி-ஏற்றமும் தருவது. பேரறிஞர் அண்ணா வழங்கிய முன்னுரை ஒன்று, கலைஞரின் புகழுக்கு முகவுரையாக ஒளிர்கின்றது. இளங்கோவின் சிலம்பு-கலைஞரின் தமிழாற்றலால் புதுவண்ணம் கொள்கிறது. அந்தப் புதுவண்ணத்தால் சிலம்பின் காவியச் சிறப்போ-பாத்திரங்களின் தகுதியோ இம்மியளவும் குன்றாது காக்கப்படுவதுடன் காலத்தின் தேவையும் நிறைவு பெறுகின்றது என்பதைப் பாராட்டிக் குறிப்பிடும் அண்ணா கலைஞரின் செழுஞ்சொல் ஓட்டத் தினையும் சீ ரி ய அழகுப் படைப்பை உருவாக்கும் திறனையும் பாராட்டுகின்றார் ; இந் நாடக நூலை வெளிக் கொணர்வது மூலம் தம்பி கருணாநிதி-தமிழ் இலக்கியத்திற்கு நற்பணி ஆற்றி உள்ளார்’ என்று குறிப்பிட்டுள் ளது-அண்ணா அவர்கள் அந்த நாளிலேயே கலைஞருக்கு வழங்கிய அறிவுலகம் மதித்தேற்கும் டோக்டர் பட்டம் அன்றோ !