பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில் கலைஞர் 直 1. என் முன்னே இருப்பன இரண்டு. ஒன்று : திருக் குறள்; மற்றோன்று : கவியரங்கில் கலைஞர்". உங்கள் முன்னே இருப்பன இரண்டு. ஒன்று : கலைஞர் என்னும் ஒரு பெருங்காப்பியக்கடல்; மற்றொன்று அக்கடலை அள்ள-இல்லை-சுவைக்க அவாவும் சிறு அகப்பை, 2. ஐந்தாண்டுகட்கு முன்பு ஒருநாள்-ஓரிரவு தமிழ்த் தாய் தன் தவப்புதல்வனை இழந்தது எண்ணி இயற்கை அன்னை இருளாடை போர்த்து வருந்திய வண்ணம் இருந் தாள். அப்போது அவள் வான்வழி வந்த இலக்கியத் தாயின் இன்(னல்) குரல் கேட்டு அவ்வொலியில் ஒன்றினாள்; ஒலியா அருவியானாள். அவள் கண்கள் அருவியாக அவள் செவியில் கொட்டிய இலக்கிய அருவி-அவல அருவி-யாது ? இதயத் தைத் தந்திடு அண்ணா: ஆம், அண்ணாவின் இதயத் தைப்போல் அனைவர் இதயத்தையும் கேட்கும் அந்த அழியாத் தமிழ்க் கவிதையின் ஒருபகுதி :

  • சராயிரம் ஆண்டின் முன்னும் இன்றுபோல் இளையவளாய் இருந்திட்ட தமிழாம் அன்னை நூறாயிரம் கோடிஎன ஆண்டுபல வாழ்வதற்கு நூலாயிரம் செய்திட்ட புலவர்களை ஈன்றாள்

எனினும் கலைமகளாம் நம் அன்னை வள்ளுவனைத் தலைமகனாப் பெற்றெடுத்தாள்.

  • காஞ்சி-அறிஞர் அண்ணா நினைவு மலரில் (1975)

வெளிவந்த கட்டுரை