பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 அண்ணாவின் அந்த முன்னுரையையே-சிந்தனைக்கு விருந்தளிக்கும் வகையில்-அதன் நுட்பத்திறன் காட்டித் தன் மதிநுட்பம் புலப்பட வரைந்துள்ளார் சஞ்சீவி. தலைவர் கலைஞர்-தமிழ் மக்கள் தெய்வம்-என்னும் கட்டுரையில்-கலைஞரின் துண்ணறிவு, நூலறிவு, செய லாற்றல், கண்டிப்பு, கருணை, அடக்கம், அறிவாய்வு ஆகிய வற்றைப் போற்றி எடுத்துக்காட்டுவதுடன் தமக்காகக் கலைஞர் இனியும் வாழார்-தமிழர்க்காக, சமநீதிக்காகவே வாழ்வார். இது காலத்தின் கட்டளை ; பட்டறிவின் பாடம்" என்று குறிப்பதன் மூலம் தெய்வம் என்று போற்றுதற்கான விளக்கத்தைத் தருகிறார். டாக்டர் சஞ்சீவி-ஒரிரு குறைகாணினும் சுட்டும் இயல்பினரன்றோ! அதே வழியில் நான் சுட்ட வாய்த்தது இது-தமக்காகக் கலைஞர் இனியும் வாழார்' என்னும் தொடர், இனியும் -தமக்காக வாழ்பவர் அல்லர் கலைஞர்' என்று இடம் பெற்றிருக்க வேண்டும். அவர் இதயத்திலும் அப்படித் தான் இடம் பெற்றிருக்க முடியும். அடுத்து ஒரு கட்டுரையில், நம் கலைஞர் பட்டதாரி அல்லர் ; ஆனால் பட்டதாரிகட்குப் பட்டமளிப்பு விழா உரையாற்றும் அறிவாண்மை பெற்றவர்’, என்று அவர்தம் அறிவின் உயர்ச்சியைச் சுட்டுகின்றார். "கலைஞர் ஒரு கவிஞர்' என்னும் தலைப்பில், கலைஞரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட தமிழ்எத்தனை எத்தனை அடைமொழி என்னும் அணிகள் பூண்ட அணங்காக அவர்தம் கவிதை அடிகளிலே நடம்புரி கின்றாள் என்பதை வரிசைப்படுத்துகின்றார். கலைஞரின் கவியரங்கக் கவிதைகளும் அவற்றைப் படைத்தவர் கற்பனைத் திறனும் ஆய்வுப் பொருளாகி யுள்ளன. ஒரு தலைப்பில்.

  • கருத்துப் பரப்புக்கலை-என்று கொள்கையைப் பரப்பும் திறனைக் குறிப்படும் டாக்டர் சஞ்சீவி அவர்கள் கலைஞரின் பாடுதிறனைப் புலப்படுத்துகின்றார்.