பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$2 பற்றிய கருத்தீடான கட்டுரை 1, அயலகத் தூதரகங்களில் பணிபுரிந்து ஒய்வுபெற்ற திரு. இராமன் என்பார் கலைஞர் பற்றி எழுதியுள்ளதை எடுத்து மொழிபெயர்த்துச் சஞ்சீவியார் தன் குறிப்பையும் சேர்த்துத் தந்துள்ள கட்டுரை 1; எனப் பதினாறு அரிய கட்டுரைகள் அடங்கிய கருத்துக் கருவூலமாக இந்நூல் அமைந்திருக்கிறது. ஆயப்புகும் எதனையும் பட்டியலிட்டுக் காட்டுவது சஞ்சீவியாரின் ஆய்வு முறைகளுள் ஒன்று. அதனை இந்நூலுள்ளும் பல இடங்களில் காணலாம். இந்நூலுள் அவர் ஆய்வுக்கு ஆட்பட்டிருப்பவர் கலைஞர் கருணாநிதி யார்-கருணாநிதி யார்? 'நடுத்தர உயரம், வழுக்கை விழும் தலை, ஒளிவு மறைவு இல்லாத மனத்தைத் திறந்து காட்டும் முகம், தோற்றத்திலேயே மதிப்பைத் தோற்றுவிக்கும் தன்மைஇவற்றின் இணைப்பே கருணாநிதி. அவர் தி. மு. க. இயக்கத்தின் ஒரு பெருந் தலைவராய்த் திகழ்பவர்; மக்கள் வெள்ளத்தைக் கிளர்ந்தெழச் செய்யக் கூடிய ஈடு இணையற்ற நாநலம் வாய்ந்தவர்; உயிர்த் துடிப்பூட்டுபவர்; திறமை மிக்க அரசியலாளர்: அனைவ: ராலும் மதிக்கப்படுகின்ற தமிழறிஞர். அவரிடம் புலமை மட்டுமன்று, அடக்கமும் மனித நேயமும் உடன் உறைகின்றன. மரியாதை, பண்பாடு ஆகியவற்றின் உறைவிடம் அவர். உண்மையில் பண்பு" எனும் உயர் தனித் தமிழ்ச் சொல்லுக்கு உலவுகின்ற வடிவ மாக இலங்குபவர் கருணாநிதி' (இந்நூல் ப. 181) இக்கருணாநிதியைச் சஞ்சீவியார் பல்வேறு கோணங் களில் கண்டு பாராட்டி மகிழ்கிறார். கலைஞர் : (i) lošāsīr — loaf off gospasir (People leader) {ւ. 61)