பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$33 சில நூல்களைப் படித்து முடித்த பிறகு அவற்றின் ஆசிரியர்களைப் பற்றி எண்ணுவதே இல்லை. அவர்கள் யாராக இருந்தால் நமக்கு என்ன என்று பொருட்படுத்தாமல் விடுகிறோம். ஆனால், வேறு சில நூல்களைப் படித்து முடித்த பிறகு, அவற்றின் ஆசிரியர்களைப் பற்றித் திரும் பத் திரும்ப எண்ணுகிறோம். மேன்மேலும் அவர் களைப் பற்றி அறிய விரும்புகிறோம். அந்த ஆசிரியர்களின் அநுபவச் சிறப்பை நினைந்து வியப்படைகிறோம். அந்த நூல்களால் பெற்ற கலைப்பயனும் அதனை நினைந்து உண ரு ம் நன்றியுணர்வுமே இதற்குக் காரணங்கள். அத் தகைய நூல்களே உயர்ந்த நூல்கள்; நின்று வாழவல்ல நூல்கள். திரு. ராசவேலு எழுதிய காதல் துரங்குகிறது” என்னும் நாவல் இந்த உயர்வகையைச் சார்ந்த நூல் ஆகும். தமக்குப் பின் மதுரைப் பல்கலைக்கழகத் துணை வேந்தராகவும் ஆதற்குரிய தகுதி படைத்தவர் என்று என் *அறிவுத் தந்தை யால் கருதப்பட்ட திரு. இராசவேலு அவர்களின் கலைமகள் பரிசு பெற்ற காதல் துரங்குகிறது” நூலுக்குச் சற்றொப்ப கால் நூற்றாண்டுக்கு முன்பு (1986இல்) அவர் அளித்த அணிந்துரையின் தொடக்க மொழி களே மேலே கண்டவை. பேராசிரியரின் இலக்கியத் திறனாய்வுரை இக்கால் இலக்கியத்திற்கும் இலக்கியப் படைப்பாளர்க்கும் மட்டு மின்றி எக்கால இலக்கியத்திற்கும் இலக்கியப் படைப் பாளர்க்கும் பொருந்தும். இவ்வாய்வுக் கண்கொண்டு நோக்கினால் நம் மாண்புமிகு கலைஞரின் திருக்குறள் ஈடுபாட்டுள்ளம் திருவள்ளுவர் ஈடுபாட்டு உள்ளமுமாகத் திகழல் தெளிவாகும்.