பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் முதல்வர் கண்ட கப்பலோட்டிய தமிழன் (1) டாக்டர் மு.வ. அவர்களின் மாணவன் என்ற முறையின் யான் பெரிதும் கருத்துகட்கே ஆட்படு பவன்; கட்சிகட்கு அன்று. அந்தவகையில் இந்திய விடுதலை வெள்ளி விழாவை இன்பத் தமிழகத்தைப் பொறுத்த வரையில் திராவிட முன்னேற்றக் கழகம் தேசியத்தைக் கருக்கொண்ட வெள்ளிவிழா என்றும் களிப்புடன் கழற லாம். ஆம். திராவிடக் கழகத்திலும் வேறுபடட வீறுடையது திராவிட முன்னேற்றக் கழகம் என்று பேரறிஞர் அண்ணா மக்கள் மனதுக்குள் பேரிகை கொட்டிய பெருநாள் 1947- ஆகஸ்டு 15. ஒரு வரலாற்று மாணவன் என்ற வகையிலும் காந்தி அடிகளைக் கடவுளாகக் கருதி வழிபடும்-வழிப்படும்-மனிதன் என்ற வகையிலும் ஒரு பொருளைப் போற்ற உரிமை படைத்தார் போற்றுவதிலும் போற்ற உரிமை படையாதாரும் போற்றுவதே போற்று தல் ஆகும் என்று போற்றுபவன் யான். உச்சிதனை முகந்தால் -கருவம் ஓங்கி வளரு தடி! மெச்சி யுனையுண்ரார்-புகழ்ந்தால் மேனி சிலிர்க்கு தடி: என்பது பாரதியின் கண்ணன் பாட்டு. காஞ்சி, அறிஞர் அண்ணா பிறந்த நாள்-எட்டாம் ஆண்டு மலர் (1972)