பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#36 (2) பேரறிஞர் அண்ணாவும் விண்ணிலிருந்து வியப்பும் விம்முதமும் கொள்ள ஏடாளும்- நாடாளும் நல்லோர் நெஞ்சமெல்லாம் ஆளும் சான்றோர் நம் முதல்வர்டாக்டர்-கலைஞர். எனவே பேரறிஞர் அண்ணாவிலும் பேருள்ளம் கொண்டு திட்ட நுட்பங்களுடன் உற்று நோக்கி யும் ஒப்பு நோக்கியும் ஆட்சி புரியும் மாட்சியினராகிய நம் முதல்வர் இந்திய விடுதலை வெள்ளி விழாவைச் சீரும் சிறப்பும் செறியக் கொண்டாடிய திறம் பண்பிலாரை தாணவும் நடுங்கவும் செய்வது; பண்புடையாரை வாழ்த்த வும் வனங்கவும் செய்வது. என்னகம்-தமிழகம்கொண்ட தென்னகம் தீட்டியது போல சென்ற ஆண்டு 14-ஆம் நாள் நள்ளிரவில் தமிழகச் சட்டப் பேரவையில் நம் முதல்வர்-தமிழ்த்தாயின் ஏன்? - இந்தியத் தாயின் தவப் புதல்வர் நிகழ்த்திய வெள்ளிவிழாப் பேச்சு கவிதை கடைப் பேருரை'யே ஆகும். அப்பேருரையில் என் உயிரையும் புல்லரிக்கச் செய்த சொல்லுரை ஒன்று உண்டு. அது இது: இனி காட்டில் இல்லார் இல்லை கலலார் இல்லை கல்லார் மீது பாய்கின்ற வல்லார் இல்லைஎங்கும் புதுமை; எதிலும் புதுமை; அனைத்தும் பொதுவுடைமை; எல்லாம் இருக்கட்டும், நல்லார் மீது பாய்கின்ற வல்லார் இல்லை’. இந்தக் கருத்து எப்படி வந்தது நம் முதல்வர்க்கு? அதிலிருக்கும் இந்தக் கருத்து வேறு யாருக்கு வந்ததுவரலாற்றில், வையகத்தில்? மற்ற மற்ற கருத்தெல்லாம் இக்காலத்தின் இயற்கை, ஆனால்,