பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 நல்லார் மீது பாய்கினற வல்லார் இல்லை இந்தக் கருத்து வந்ததே நம் முதல்வருக்கு-அண்ணன் அறிஞரின் ஆருயிர்த் தம்பி அல்லவா. நம் கலைஞர்?அதனாலேயோ? எப்படியாயினும் இப்படி நள்ளிரவிலும் எண்ணிய-திண்ணிய அந்த உள்ளத்திற்கு உலகத்தையே பரிசாக உருட்டலாம் அல்லவா? மக்களாட்சியின்-பொது வுடைமைத் தத்துவத்தின் -உயிர்த் துடிப்பாய் விளங்கும் இந்தக் கருத்தை உரிய நேரத்தில் உரிய இடத்தில் உரைத்த உத்தமனுடைய வீரம் வெறுஞ் சொல் வீரமோ? செயல் வீரத்தை உயிராகப் பெற்ற-சிந்தனை வீரத்தை உள்ள மாகப் பெற்ற-சொல் வீரத் திருவுருவர் அன்றோ நம் கலைஞர் முதல்வர்? அண்ணல் காந்தி அடிகள் அரசியலில் அறத்தைப் பிணைத்தார்: பேரறிஞர் அண்ணா அரசியலில் சிந்தனைத் தமிழைப் பிணைத்தார்; பெருங் கலைஞரோ அரசியலில் அறத்தோடு சிந்தனையோடு செயல் தமிழ்ப் பண்பாட்டையும் அல்லவோ சேர்த்து வருகிறார்? இந்த உண்மைக்கு ஓர் உரைகல்லாய் இந்தக் கட்டுரைக்கு ஏற்றதாய்-ஓர் எடுத்துக் காட்டு: (3) தமிழ்நாடு சட்டப் பேரவையில் நம் முதல்வர்கலைஞர் - முழங்கிய முழக்கத்தில் - நாட்டு விடுதலை வெள்ளி விழா நாள் பொன்னுரையில் - வைர ஒளி வீசிய கலையார்ந்த கடமைக் கருத்துகளுள் ஒன்று: மற்றொரு மகிழ்ச்சிகரமான செய்தி தமிழக மக்களைப் பூரிப்பில் ஆழ்த்துகின்ற புதுச் செய்தி: சிலை வைத்துள்ளோம் சிதம்பரனார்க்குச் சென்னைக் கடற்கரையில்; செப்டம்பர்த் திங்கள் அந்தச் செந்தமிழன் சிலைதனையே திறக்க வருகின்றார் நம் அன்புக் குரிய பிரதமர் துரத்துக்குடிக்கு: