பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 சிலையான தமிழர் சிதம்பரனார் இழுத்திட்ட செக்கு ஒன்று கோவைச் சிறையினிலே கேட்பா ரற்றுக் கிடக்கிற செய்திதனை அறிவீரோ என்னவோ நானறிவேன்; அந்தச் சிங்க மறவன், இழுத்த செக்கினை - இங்குச் சென்னைக்குக் கொணர்ந்து சிறப்பான இடமொன்றில் காட்சிப் பொருளாய் ஆக்குதற்குத் திட்டம் தீட்டிவிட் டோம் இத்திங்கள் முடிவதற்குள் இனிது நிறை வேறும் அந்தக் காரியம் என்று கருதுகின்றேன்' முதல்வர் . கலைஞர் பேருரையின் முடிவான பகுதி இதுதான். ஆனால் இந்த முடிவுக்கு ஒரு முத்து வேண்டாவோ? முத்தளிக்கும் முத்தர் முத்தின் முறுவல் பாரீர்: தியாகத்தின் சின்னமன்றோ அந்தச் செக்கு! தியாகத்தை மதிப்பதன்றோ நம் அரசு! தில்லையாடி வள்ளியம் மைக்குத் திருநகர் அமைத்ததன்றோ தமிழ் அரசு அதனாலே தியாகத்தைப் போற்றிடுவோம்! தியாகிகளைத் தெய்வமெனத் தொழுதிடுவோம்! மண்காக்க - மானமொழி காக்க - கண்காக்கும் இமைபோல் வாழ்ந்து வீழ்ந்து பட்ட வீரர் குல நாயகர்க்கு இந்நாளில் அனைவருமே வணக்கம் செய்வோம்! சொல்லுக்குச் சொல் உண்மையும் உணர்வும் கொப்பளிக்கும் இச்சொற்களே இந்திய விடுதலை வெள்ளி விழா நள்ளிரவுப் பேச்சில் நம் நாடாளும் நாயகரின் நல்லுரையின் மணிமுடியின் முத்தாய் ஒளி வீசுவன. இந்தக் கவிதைப் பகுதியையும் கூர்ந்து ஆராய்ந்தால் தியாகப் பன்மையிலே தேச பக்த சிதம்பரத்தின் ஒருமையை உணரலாம்.