பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 40 உரிய நாளில் - உரிமைத் திருநாளில் கரு உருவாகி விட்டது. யாருக்கு நூறாண்டு .ெ சால் வோம்? கப்பலோட்டிய தமிழருக்கா?- அவர் புகழ்க் கப்பலைக் காலக் கடலில் ஒட்டும் - தலைசிறந்த மாலுமி - நம் கலைஞர் - முதல்வருக்கா? (5) இக்கட்டுரையின் தொடக்கத்தில் எவ்வாறு திராவிட முன்னேற்றக் கழகம் தேசியக் கருக்கொண்டதின் வெள்ளி விழாவாகவுமே இந்திய விடுதலை வெள்ளி விழாவைக் கருதலாம் என்று குறிப்பிட்டோமோ அவ்வாறே தலைவரி ம. பொ. சி.-யின் தமிழரசு இயக்க முயற்சி தீவிரம் கொண்டதன் வெள்ளி விழாவாகவுமே இந்திய விடுதலை வெள்ளி விழாவையும் கப்பலோட்டிய தமிழரின் நூற்றாண்டு விழாவையும் போற்றலாம். மாண்புமிகு ம. பொ. சி. அவர்கள் கடந்த கால் நூற்றாண்டுக் காலத்திற்கு மேலாக வ. உ. சி.-யின் புகழைப் பட்டி தொட்டிகளில் எல்லாம் பரப்ப மேற் கொண்ட முயற்சிகளின் முடிசூட்டு விழா அன்றோ வ. உ. சி. நூற்றாண்டு விழா - இந்திராவின் துரத்துக்குடி வருகை-சிலை திறப்பு-இந்தியத் தபால் தலை வெளியீடு எல்லாம். சிலம்புச் செல்வர் - தாமரைச் செல்வர் - திரு. ம. பொ. சி.-யின் புகழ்களுள் எல்லாம் ஒன்று அவர் வ. உ. சி. வழிவந்த ம. பொ. சி. என்று பெற்றிருக்கும் இனையிலாப் புகழே ஆகும். இருபதாண்டுகட்கு முன்பு ஒரு பெருமாநாட்டில் வ.உ.சி. வழி வந்த ம. பொ. சி. அ. வர் க ளே! என்று நான் விளித்த மாத்திரத்தில் கூடியிருந்த ஆயிரம் ஆயிரம் விழிகளும் அள்ளி வீசிய ஒப்புதல் ஒளியை - உவகை ஒளியை - இன்று நினைத்தால் பார்வை இழந்தவனும் பார்வை பெறுவான் அல்லனோ ?