பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$46 2.3.2 வறட்சியை நெருப்புக் காடெ'ன இரண்டாம் வரியில் பொறித்துள்ளீர்கள். வேண்டியதுதானே வேறு எப்படித்தான் வறட்சியின் கொடுமையை வருணிக்க -இல்லை-எடுத்துக் காட்ட முடியும்? இந்தக் கூற்றில் உயர்வு நவிற்சி அணி ஒரு சிறிதும் இல்லையே; தன்மை நவிற்சிதானே! நெருப்புக்காடு என்பது எவ்வளவு பொருத்தம்: இனி, காட்டுக்கும் மழைக்கும் உள்ள தொடர்பும் தாங்கள் அறிந்தோ அறியாமலோ இந்தத் தமிழ்த் தொடரில் அமைத்திருப்பது தலைமைச் சிறப்பு. காடுகளாலேயேதான் கார்முகில்கள் மழை பொழியும் என்பர். எனவே, இப்பொழுதும் கார்முகில்கள் அணைக்க வேண்டிய (இரு பொருள்களிலும்) புதுக்காடு- பெருங்காடு -வறட்சியின் நெருப்புக்காடு அல்லவோ. 2.3.3 மூன்றாவது வரியில் நீ" என்ற ஒரெழுத்து ஒரு மொழி மீண்டும் உறுத்து விழிக்கிறது-தனிச் சொல்லாய்த் தலை தூக்கி நிற்கிறது. ஆம்; அந்தச் சொல்லில்தான் மாமல்லை படைத்த மகேந்திரன் போல், பூம்புகார் படைத்த பொன்னிப் புரவலர் ஆகிய தாங்கள் கண்ணகியின் சீற்றத்தைக் காட்டுகிறீர்கள் அன்றோ ? 2.3.4 வடித்திடும் கண்ணிரால் அனைத்து விடு" என்ற வரிதான் பகைவர்களிடமும் தாங்கள் காட்டும் பண்பும்-மாற்றாரையும் தாங்கள் மதிக்கும்-இல்லைமன்னிக்கும் மாட்சியும் உணர்த்துகிறதோ! மழையைப் பொழியச் சொல்லிய தாங்கள் இப்பொழுது கண்ணிரை வடித்திட அல்லவோ சொல்கிறீர்கள்? ஆம், வானம் செய்த கொடிய பிழைக்குக் கண்ணிர் வடித்தல் தானே தகும் , தவம்? இந்த வரியிலும் சொற்கள் அமைந்திருக்கும் முறையும் (பாட்டிலும் முறையே தலைமைப்பண்பு) போற் றத்தக்கது. வடித்திடுதலே முதன்மையானது- முதன்மை யாக வேண்டுவது. அடுத்து, பொழிதல் போலவே நடு நாயகமாகப் பொருந்தத்தக்கது கண்ணிர்தான். முடிவாக