பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4 எனப் பல்தொடர் ஓவியங்களாகப் படைத்துக் காட்டு மிடங்கள் பல. மேலும், நம் கலைஞர் பட்டதாரி அல்லர் ; ஆனால் பட்டதாரிகளுக்குப் பட்டமளிப்பு விழா உரையாற்றும் அறிவாண்மை பெற்றவர். நம் கலைஞர் வழிவழிச் செல்வர் அல்லர் ; ஆனால் செல்வர்கள் எல்லோரையும் நல்வழிக்குக் கொண்டுவரத் தெரிந்த அல்லாளர்' {L, చేజె} கலைஞரின் கை கன்னித் தமிழ் வளர்க்கும் கை; ஏழை எளியோர் கண்ணிர் துடைக்கும் கை; வயிற்றுக்காக நடிக்கும் புல்லரினும் வாய்மைக்காக இடிக்கும் புலவரைப் போற்றும் கை; உண்மைக்கும் உழைப்புக்கும், ஒழுக்கத்துக்கும் உயர்வு தரும் கை. அறிஞர் வழியைக் கலைஞர் வழியாகஅறிவைக் கலையாக மாற்றும் கை' (ப. 37) கலைஞர் பெருந்தகை தகுதி காக்கும் தகுதியாளர்தயாளர். தன் தகுதி காக்கிறார்; தன் தாய்மொழியைதாய்நாட்டைக் காப்பவரைக் காக்கிறார்"... (பக். 40)

செயல் வீரத்தை உயிராகப் பெற்ற சிந்தனை வீரத்தை உள்ளமாகப் பெற்ற-சொல்வீரத் திருவுருவர் அன்றோ நம் கலைஞர் முதல்வர்' (ப. 137)

எனக் கலைஞரின் குணநலன்களைக் குன்றின் மேலிட்ட விளக்காக்கிக் காட்டுகிறார்.

நடை-படை இரண்டிலும் பேரறிஞர் அண்ணாவை எதிரொலி செய்யும் ஏந்தல் கலைஞரே' (ப. 158)

பேரறிஞர் அண்ணாவும் விண்ணிலிருந்து வியப்பும் விம்மிதமும் கொள்ள ஏடாளும்-நாடாளும்-நல்லோர் நெஞ்சமெல்லாம் ஆளும் சான்றோர் நம் முதல்வர் கலைஞர்' (ப. 140)