பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 5.5 மாசுகள் கற்பித்தேனும் என்னும் தொடரில் தான் எவ்வளவு பழிப்பு - பதைப்பு? ஏளனம் - எரிச்சல்? 5.6 கற்பித்தேனும்’ என்ற சொல்லில் உள்ள உண்மையில்தான் எவ்வளவு வறட்சிக் காற்றின் வெப்பம்? மேலும் கற்பனை, மறவர் மக்களால் பொடிப்பொடியாகும் என்னும் கருத்தோ? 5.7 மகுடத்தைப் பறிக்கலாமென்று' எ ன் ற தொடரில் உள்ள ஆம்' எதிராளியின் நுண் கனவை வெளிப்படுத்தும் அன்றோ. மேலும் அப்படியே பார்த்தாலும் மகுடத்தைத்தானே பறிக்க முடியும்? மகுடம் போவதால் மனிதன் போய்விடுவதில்லையே! 5. 8 மத்தியில் உள்ளோர் சிலர்: என்னும் தொடரில் மத்தியில் என்பது எவ்வளவு இராஜதந்திரச் சொல். நல்லபடியாய் இருக்கக்கூடிய இருவரையும் கூட பிரிக்கக்கூடிய பேர்வழிகள் மத்தியிலும் இருப்()ேபார் அல்லவோ? ஆனால் நல்லவேளையாக அவர்கள் பலரில்லை-சிலர்தான். 5.9 மத்தியில் உள்ளோர் சிலர்' என்னும் தொடரோடு தனிச்சீராய் அவதூறு என்ற சொல் ஆந்தைபோல் முழித்துக்கொண்டு அ ைம ந் தி ரு ப்ப து மெத்தப் பொருத்தம்! 5, 10 அவதுiறு' எவ்வளவு கொடுமையானது என்பது அது கத்தியாக உருவகிக்கப் படுவதாலேயே உணரத்தக்கது. மத்தியில் உள்ளவர் சிலர் கத்தியை வீசினால் என்ன ஆகும்? சுற்றிலும் இருப்போர் எல்லோரையும் அல்லவோ சுழற்றி எறியும்? பக்கம் பார்க்காமல் பலம் பார்க்கும் கத்தியை வைத்திருப்போர் என்ன கதி ஆவர்?