பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15? 5.11 கத்தியை வீசுகின்றார்-அவர் தம் புத்தியைத் தீட்டிடவே என்னும் வரிகள் ஒரு தொடர் கதை அன்றோ? ஆம்: பேரறிஞர் அண்ணா பேசிய மொழியன்றோ அது? அறிஞர் பேசியதையே கலைஞராகிய தாங்கள் பேசுவது வளரும் நாவல் அல்லவோ? 5.12 பொழிந்திடுக வானமே" என்ற தொட ரோடு நீதான்" என்ற தனிச்சீர் அமைந்திருப்பது இயற்கையிடம் மனித இதயம் சரணடைவதற்குச் சாட்சி அன்றோ? இயற்கையை வெல்ல வல்லார் யாரோ? *நீ தான் என்பதில் நீ தானாகவே (இயல்பாகவே) என்பதும் தொனிக்கிறதன்றோ? 6. இந்துக்கள் முஸ்லிம்கள் இங்குள்ள கிறித்தவர்-உன் பந்துக்கள் வேண்டுகின்றார் முந்துத் தமிழ் போல மும்மாரி பொழிக என்று இனங்களும் மதங்களும் மொழிகளும்கூட இயற்கையால் ஏற்பட்ட வேற்றுமைகளே என்றாலும் அந்த மை” களுக்கு அடிப்படையில் இருக்கும் ஒற்றுமையை அறியார் அறியாதாரே! 6.1 இந்துக்கள் முஸ்லீம்கள் இங்குள்ள என்ற வரியை அடுத்து கிறித்தவர்கள்' என்ற சொல் அமைத் திருப்பதும் ஆழக் கருதத்தக்கது. இந்த அமைப்பில் கால முறை கருதப்பட இருப்பதோடு இந்த நான்கு சோ ற் களுள்ளும் இங்குள்ள என்ற தொடர் உயிராய் அமைந் திருப்பது ஊன்றி உணரத்தக்கது. 6.2 உன் பந்துக்கள் வேண்டுகின்றார்’ என்ற தொடரில் உன் என்பது தனிச் சீராகவும் (அதன் சீர்நாடி தானே இந்தப் பாட்டில்-இந்த நாட்டில் இத்தனைச்