பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$52 சீர்களும்) பந்துக்கள் வேண்டுகின்றார் என்பது தனி வரியாக அமைந்திருப்பதும் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். பந்துக்கள் என்ற சொல்லுக்கு என்ன பொருளோ? ஆழ்ந் திருக்கும் கவியுள்ளம் யாதோ? பந்துக்கள் என்றால் உறவினர்கள் என்றும் பொருள் கொள்ளலாம்; பெருமைப் பெருந்துளிகள்’ என்றும் பொருள் கொள்ளலாம்; எப்படி யாயினும் பந்துக்கள் (உறவினர்கள்) வேண்டின் பந்துகள் (மிகப் பெருந்துளிகள்) கிடைப்பதே முறை அன்றோ? 6.3 முந்துத் தமிழ் போல மும்மாரி பொழிக என்று என்ற தொடரில் விளங்கிவிடுகிறது. வீணைத் தமிழ்க் கவிஞராகிய தங்கள் விழைவு எல்லாம். *முந்துத் தமிழ் என்ற தொடர் முத்துத் தமிழின் வித்து போலும்! முந்துவதுதானே முத்து. தமிழும் முந்திதமிழனும் முந்தி-எதிலும். முந்துத் தமிழ் முத்துத்தமிழாய் இருப்பதிலும் முந்திதானே. அதனால் மும்மைக்கு உதவும் முழுமையையே மும்மாரி பொழிக" என்று வேண்டுகிறது முத்தமிழ்க் கவிஞர்-கலைஞராகிய தங்கள் திருவுள்ளம். "திங்கள் மும்மாரி" பொய்யாது பெய்தால் இந்தத் தீதெல் லாம் ஏது? 7. கல்லவர்கள் அழைக்கின்றார் கன்றியற்றவரோ நீ கருணைகாட்டாமல் இருக்கவேண்டுமென கினைக்கின்றார்-அவர்தம் அனல் கெஞ்சம் குளிரடைய உன் புனல் கரத்தை நீட்டிடுக இப்பகுதியில் இரு சிறப்புக் கருத்துகள் இருப்பதாக எண்ணலாம். அழைப்பார் ஒரு சாரார்; அதைத் தடுக்க நினைப்பார் இன்னொரு சாரார் அழைப்பவர்களோ நல்லவர்கள்; தடுக்க நினைக்கின்றவர்களோ நன்றியற்றவர் கள். என்ன செய்ய போகிறாய்?" என்று வானத்துக்கே சோதனை வைக்கிறீர்கள் வையக வீரராகிய தாங்கள்!