பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 8.2 கவிதை வானமே" என்று தொடங்குகிறது. *வாழவே" என்று முடிகிறது. ஆம்; வாழ்வதற்கு வழங்க வில்லையானால் வானத்திற்கு வான் என்று பெயர் ஏன்? அது இருந்தால் என்ன? இறந்தால் என்ன? 8.3 தங்கள் கவிதையின் முதல் வரி வானமே பொழிக நீ”, முற்றும் வரி வையகம் வாழவே' எவ்வளவு பொருத்தம் - பொருத்தமே புலமை அன்றோ? 9. வானமே பொழிக நீ!’ என்ற தங்கள் கவிதையையே யான் தொடக்கத்தில் குறிப்பிட்டது போல் இதுவரை தாங்கள் யாத்தவற்றுள் எல்லாம் அமரத் தன்மை வாய்ந்ததென்றே எண்ணுகிறேன். 9.1 உள்ளவே உரை: கடலில் காற்று அழுத்தம் ஏற்பட்டால் புயலும் மழையும் புறப்படுவது போல் நெருக்கடி ஏற்பட்டால்தான் சத்தியமான - நித்தியமான கவிதைகளும் பிறக்கும் போலும்! 9.2 அதிகமான் ஒளவையிடம் செய்த சூழ்ச்சி போல் தங்கள்பால் இந்தக் கவி மழை வேண்டியே- பா வழிபாடு விரும்பியே-கார் முகிலும் கனத்த சூழ்ச்சிகள் செய் கின்றதுவோ? வாய் திறந்து ஒரு முறை சொல்லிவிட்டால் தாங்கள்தான் மங்காத் தமிழில் ஒரு மாபெருங் காவியமே பாடித் தந்து விடுவீர்களே! பின்குறிப்பு:- தமிழர் மனப்பாடம் செய்யத்தக்க வானமே பொழிக நீ என்ற இக்கவிதையை நாளிதழ் களிலும், சுவரொட்டிகளிலும் வெளியிட்டுக் கவி வழி கன மழை பெறுமாறு மக்கள் மனம் மன்றாட ஒன்றாடச் செய்ய வேண்டு கிறேன்.