பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 என அண்ணாவழி நின்று அருந்தொண்டாற்றிப் பெருமை கொள்பவர் எனப் பெருமிதத்துடன் எடுத்து மொழிகிறார். அண்ணாவைப் பெருந்தலைவன்’ என்று கலைஞர் கொள்வது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை நம் முதல்வர் பெருங்கலைஞர்" எனத் தெரிந்து தெளிகிறார். இத்தகு கலைஞரின் கவிதைகளைச் சொல்லுக்குச் சொல் ஊன்றிப் படித்துத் திளைத்துத் தான் பெற்ற இன்பத்தை அனைவரும் பெறும் வகையில் அரிய கட்டுரைகளை ஆக்கித் தந்துள்ளார், திரு. ந. சஞ்சீவியார். கலைஞரின் கவிதைகளைத் துருவி ஆய்ந்து, கலைஞர் தமிழைப் போற்றும் சொற்களையும் சொற்றொடர் களையும் வகைதொகை செய்து வளங்கண்டு, இவ்வகை தொகை ஆராய்ச்சியால் தமிழிலக்கியப் பரப்புள் வேறு எந்தப் புலவரும் இந்த அளவிற்குப் பைந்தமிழின் பல் வளத் தையும் பல்திறனையும் ஒரு சேரப் பாடியவரில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறார் (ப. 56) கலைஞருடைய கவிதைகளின் அமைப்பு போற்றுதற் குரியது; உணர்ச்சி அளவிடற்கரியது; உவமை, உருவகம், கற்பனை ஊற்றெடுத்துப் பெருகுகின்றன. அவர் கவிதை களில் சிலேடை பேரிடம் பெறுகிறது. கவிதை நெடுக ஆங்காங்கே அண்ணாவைப் பற்றிய அருமை பெருமைகள் பொதிந்து நிற்கின்றன என்பவற்றைச் சான்றுகள் காட்டி நிறுவுகிறார். கலைஞரின் கவிதைகளை மையமாகக் கொண்டு ஆராய்ந்து, கலைஞர் அவர்களின் கவிதைகளில் வேறு எந்தத் தமிழ் இலக்கியத்தை விடவும் திருக்குறள் ஆட்சி மிகுதியாக இருப்பதை நிறுவிக் காட்டுகிறார். அவருடைய கவியரங்கக் கவிதைகளில் 53 குறட்பாக்களை எடுத்தாண்டுள்ள மையைப் பட்டியலிட்டுக்காட்டி மெய்ப்பிக்கிறார். சில குறட்பாக்களை ஒரே முறையும், சிலவற்றை இரண்டு