பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 முறையும் ஆண்டுள்ள கலைஞர் அவர்கள், இரண்டு குறட்பாக்களை மும்மூன்று முறை எடுத்தாண்டுள்ளதை மிக நுட்பமாக ஆராய்ந்துள்ளார். அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு. கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் ஆங்காமை வேண்டு பவர் என்னும் இவ்விரண்டு குறட்பாக்களுமே மாண்புமிகு கலைஞரின் இரு மலர்விழிகள் என்பது தம் கருத்து என் ஆசிரியர் கூறுவது நம்மைப் புல்லரிக்கச் செய்கிறது; அவரது ஆய்வின் ஆழத்தை எண்ணி இறும்பூதடைய வைக்கிறது (ப.123). கலைஞருடைய கவிதைகள் சுருங்கிய சொற். களில் சுடர்விடும் உணர்வுகளின் நிறைவாய் அமைந்திருப் பதை ஆய்வு வழி நின்று உணர்த்துகிறார். ஒர் இலக்கியத்துக்கு இருக்க வேண்டிய முன்னோர் மொழி பொருளே அன்றி அவர் சொல்லையும் பொன்னே போல் போற்றும் புலமை-பண்புநலன் கலைஞரிடம் திரம்ப உண்டு என்பதைத் தக்க எடுத்துக்காட்டுகள் கொண்டு மெய்ப்பிக்கிறார். புலவர் புகழ் தமிழ் என்றே இருந்த நிலையை இந் நூற்றாண்டின்-இருபதாம் நூற்றாண்டின் இயல்புக்கும் இன்றியமையாமைக்கும் ஏற்பப் பொது மக்கள் புகழ் தமிழ் ஆக மாற்றிய பெருமை கலைஞரின் கவிதைக்கு உண்டு என்பதைச் சஞ்சீவியார் மகிழ்வு பொங்கக் கூறுகிறார். உண்மையும் தன் மனதுக்குச் சரியெனப் பட்டதை எது பற்றியும் கவலையின்றிச் சொல்லுதலும் ஆய்வாளனின் முக்கிய இரு பண்புகளாம். இந்த இரண்டையும் சஞ்சீவி யார் நிரம்பப் பெற்றிருந்தார் என்பதை ஆய்வுலகம் ன்கறியும். இந்நூலும் இதற்குத் தக்க சான்றாக அமை