பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171 ஆம். அந்த மென்மையிலும் மென்மையான மனத்தின் வன்மையே வன்மை! அந்த மென்மைக்கும் அந்த மென்மை தந்த வன்மைக்கும் காரணம் ? புனித உள்ளம் - அன்பு உள்ளம் - அரவணைக்கும் அன்னை உள்ளம்

  • ஆம். அன்புக்கும் அதன் எல்லையால் இலங்கும்

அன்னை அன்புக்கும் அடிப்படை எது ? புனிதம்'. இந்த முதலடி களும்-இம்முதலடிகள் போலவே பாட்டு முழுவதும் உள்ள எல்லா அடிகளும் படிகள் போல ஒன்றோடொன்று பிணைந்து நம்மை மேலே மேலே ஏற்றிச் செல்லும் ஏற்றம் தான் இதயத்தைத் தந்திடு அண்ணா!"வின் இமயவெற்றி. இந்த வெற்றி ஒரு கவிஞருக்கு எப்போது வாய்க்கும் ? இரத்தத்தின் ஒவ்வொர் அணுவிலும் உண்மை உணர்வும்ஊடுருவிப் பார்க்கும் ஆற்றலும் இருந்தாலே ஆகும். நேற்று சாவின் வாயிலிருந்து தப்பிய மாவீரன் டாக்காவில் சிங்கம் போல் முழங்கியதையும் சிறு குழந்தைபோல் தேம்பியதை யும் நினைத்துப் பார்த்தால் கலைஞரின் சொற்களின் அடிப் படை உண்மை கண்ணையும் கருத்தையும் பறிக்கும் ! (இ) பேரறிஞர் அண்ணாவின் அகமலர் கண்டோம்இனிப் புறமலர்கள் காண்போம். -அவர் மலர் இதழ்கள் தமிழ் பேசும் - மா, பலா, வாழையெனும் முக்கனியும் தோற்றுவிடும் ஆம். இங்கும் மலர் கூட இல்லை அதன் இதழ்கள் தான்! கனிவுடைய அந்தத் தமிழுக்குக் கனிகள்-முக் கனிகள்-தோற்றுவிடுமாம்! உண்மைதான்-அண்ணாவின் கனிமொழிகட்கு மட்டுமில்லை-அக்கனியினிமை காட்டும் கலைஞரின் கனிமொழிகட்கும் நம் உள்ளம் தோற்றே விடும்!