பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 (ஈ) அடுத்து மென்மை வன்மையாகும் மேன்மை வருகிறது எப்படி? வேலாய்-வாளாய்! விழிமலர்கள் வேலாகும், வாளாகும் எப்போது? தீங்கொன்று தமிழ்த்தாய்க்கு வருகுதென்றால்? சரிதானே? பகையைச் சரிக்கத்தானே? (உ) தமிழுக்கும்-தமிழர்க்கும் புதுநடை தந்த அண்ணாவின் பாவடி பற்றிய பாவடி உண்டோ? ஏன் இல்லாமல்? இதோ: கால் மலர்கள் வாடினும் அவர் கடும் பயணம் கிற்காது: அடி! ஒரே அடி! ஆம். ஒரே அடிதான்! போதுமே பேரறிஞர் அண்ணாவின் பெருந்தொண்டை-நாம் இன்புற அவர் பட்ட துன்பத்தைப் புரிந்து கொள்ள! இதயத்தைத் தந்திடு அண்ணாவின் இதயத்தைப் பிழிந்திடும் முதலிடம் இந்த இடம். ஆம். திருவடிப் பெருமை சமயங்களும் சாற்றும் பெரும் பெருமை அன்றோ! அதனாலன்றோ ஆண்டவன் திருவடி அடியார் திருமுடி? (ஊ) இதழ்-விழி-கால்-சரி. கை? ஆம், அவற்றின் பெருமையே பெருமை: அக்கைகள் அன்பின் வண்ணம்? அருளின் வடிவம் விளக்கம் வருமாறு: கை மலர்கள் பிணைந்து கிற்கும், தம்பியரை, கழகத்தை! அம்மலரே எதிரிகளை மன்னித்து கெற்கதிர்போல் தலை நாணச் செய்துவிடும் இணையில்லா இணை பேரறிஞன் பெருங்கைகள்! அதைக் கண்டு காட்டும் கஞைரின் கண்களே கண்கள்! (எ) இனி 12 முதல் 19 வரை எட்டு வரிகள் தமிழறி யாதார்க்கு எட்டாத இன்பச் சோலை மெய்யாகவே. கலைஞர் பூவுள்ளம் ஈண்டுப் பொழில் உள்ளமாக மாறு