பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177 நடுத்தர உயரம், வழுக்கை விழும் தலை ஒளிவு மறைவு இல்லாத மனதைத் திறந்து காட்டும் முகம், தோற்றத்திலேயே மதிப்பைத் தோற்றுவிக்கும் தன்மை இதுதான் கருணாநிதி. அவர் தம் மனைவி தயாளு அம்மாளுடன் வந்திருந்தார். அந்த அம்மையார் ஒல்லி, கணவருக்கு நிகரான உயரம். ஆம், காஞ்சிபுரம் பட்டுப் புடவை, வைர மூக்குத்தி, கம்மல், நெற்றியில் குங்குமம், தலையில் மல்லிகை மலர் இவை அணிந்த வழிவழித் தமிழ் மரபில் வந்த பெண்ணோவியம் ! கருணாநிதியுடன் நிதித் துறை மூத்த அதிகாரி, தனி மருத்துவர், தனிச்செயலர் இவர்களும் வந்திருந்தார்கள். அமைதியான, அறிவான குழுவினரான இவர்களை வரவேற்பதில் தனிமகிழ்ச்சியே இருந்தது. (தலைவர் கருணாநிதியின் ஆட்களைத் தேர்ந் தெடுக்கும்-தெரிந்து வினைசெய்யும் திறமும் அதை அறிந்து போற்றும் திரு. இராமனின் திறமும் நினையத் தக்கண்) மேற்கு ஜெர்மனியில் உள்ள பன்னாட்டு உறவுமன்றம் கருணாநிதியின் வருகை, வரவேற்பு, போக்குவரத்து, தங்கும் உணவகம் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருந்தது. அந்த அமைப்பினரே மெத்த யோசனையுடன் போன் பல்கலைக் கழகத்தில் படிக்கும் ஓர் இந்திய்த் தமிழ் மாணவரை ஜெர்மன் மொழி தெரிந்தவரை உடன் செல்லவும் மொழி பெயர்ப்புப் பணி புரியவும் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் திரு. கருணாநிதி தாம் வந்த இருபத்துநாலு மணி நேரத்தில் என்னையே தம்முடைய நாலுநாள் பயணத்தின் போதும் உடனிருக்கிச் சொன்னார். அப்போது சப்பென்று அந்த மாணவனுக்குத் தமிழும் நன்றாகத் தெரியவில்லை ; செர்மன் நன்றாகத் த்ெரியும் என்றும் தோற்றவில்லை’ என்றார். அலுவல் சார்பான கட்டங்களிலும் செய்தியாளர் நேர் காணல் கட்டங்களிலும் சமூக அளவளாவற் கூட்ட்ங் களிலும் திரு. கருணாநிதி செந்தமிழிலேயே பேசினார். 3盛忍3~翼感