பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறது. கலைஞரின் நெஞ்சுக்கு நீதியை மதிப்பிடுகின்ற சஞ்சீவியார், நான் முதன் முதலாகத் தன் வரலாறு ஒன்றை ஆய்ந்து எழுதும் கட்டுரை இதுதான்' எனத் தன்னடக்கத் தோடு உண்மையை ஒளிவு மறைவின்றிக் கூறுகிறார். கலைஞர் தம் நெஞ்சக் கூறாக 128 செய்திகளை அவர் பட்டியலிட்டுக் காட்டியிருப்பது அவரது பேருழைப்புக்கும் அழுத்தமான ஆய்வுக்கும் சான்றாம். அவற்றுள் ஒன்றாக அந்நூலில் பிறமொழிக் கலப்பு (நூல் முழுதும் அழகுத் தமிழ் முகத்தில் அம்மை வடுக்கள் போல) உள்ளது என அவர் சொல்வது காமம் செப்பாது கண்டது மொழியும்’ ஆய்வுப் பண்புக்கு எடுத்துக்காட்டாம். தன் ஆராய்ச்சியைப் பற்றிய உயர்வான மதிப்பீடுதன்னம்பிக்கை கொண்டிருந்தவர் சஞ்சீவியார், கலைஞரின் கவிதைகள் ஆராய்ச்சி நெறிமுறைகள் அத்துணைக்கும் ஈடு கொடுப்பனவாக அமைந்துள்ள சிறப்பைச் சொல்லப் புகுகின்ற அவர் என் ஆண்மைகொள் ஆராய்ச்சிக்குரிய கருவூலமாய் விளங்குவன கலைஞர் கவிதைகள்' என்கிறார் (ப. 77), தன் ஆராய்ச்சியை ஆண்மைகொள்' ஆராய்ச்சி என்று சொல்லுகின்ற தன் வீறுகொண்ட தண்டமிழ்க் கொண்டல் நம் சஞ்சீவியார். தாமரைத் தண்டா துரதி மீமிசைச் சாந்தின் தொடுத்த தீந்தேன் போலப் புரைய மன்ற புரையோர் கேண்மை (நற். 1: 2-4) என்பன நற்றினைப் பாடலடிகள். பொய்கையில் மலர்ந்த தாமரையின் தாதினை ஊதி, உயர்ந்த மலையிடத்து நின்ற சந்தன மரத்தில் வைக்கப்பெற்ற இனிய தேனைப் போல உயர்ந்தோருடைய நட்பு என்றும் உயர்ந்ததேயாம் என்பது இவ்வடிகளின் பொருள். பூக்களில் சிறந்தது தாமரை. மலைமீது நிற்கும் மரங்களில் சிறந்தது சந்தனம். சிறந்த பூவின் இனிமை