பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$78 அவர் வாயிலிருந்து பொருத்தமான திருக்குறளும் பிற தமிழ் இலக்கிய மேற்கோள்களும் அழகாகவும் இயல்பாகவும் வந்தன. (ஒரு மொழி-அதுவும் தாய்மொழி கவன மாகவும் நுட்பமாகவும் பயன்படுத்தும்போது அதுதான் எவ்வளவு மயக்கக் கவர்ச்சியைத் தருகிறது!). தி.மு.க. இயக்கத்தின் குறிக்கோள்களையும், மைய மாநில உறவுச் சிக்கல்களையும், தமிழகத்திற்குக் கூடுதல் தன்னாட்சி பெறத் தன்கட்சி கொண்டுள்ள நோக்கத்தையும் திரு. கருணாநிதி தெள்ளத் தெளிவாக உணர்ச்சித் திறத் துடனும் விளக்கினார். (இந்தநேர்முகங்கள் பற்றிய விவரங் களும் கலைஞர் எழுதிய இனியவை இருபது என்ற நூலில் {1973) உள்ளன. இந்நூலின் முன்னுரை 1.4.73 கலைஞ ரால் எழுதப்பட்டுள்ளது. ந.ச.) திரு. கருணாநிதி ஆங்கிலத்தில் ஒரு சொல் கூடச் சொல்லவில்லை. ஆனால் அவர் பணிமுறை மொழி பெயர்ப்பாளரின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைக் கவன மாகக் கேட்ட வண்ணம் இருப்பதையும் தம் கருத்தைத் துல்லியமாகப் புலப்படுத்தாத எந்த ஓர் ஆங்கில மொழி யாக்கத் தவறையும் உடனுக்குடன் திருத்துவதையும் கண்டேன். ஒருகாலத்தில் சில காங்கிரஸ் தலைவர்கள் இருந்ததுபோல் தி.மு.க. தலைமை மதுவிலக்கு பற்றி வெறியாக இல்லை.அவ்வாறே புலாலுண்ணாமையின் நலங் கள் குறித்தும்அவர்கள் உணர்ச்சிமிகு உரைகள் நிகழ்த்தியது இல்லை. (ஜனதாவைச் சார்ந்த தமிழக முன்னாள் ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரிக்கும் இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் சஞ்சீவி ரெட்டிக்கும் நாமறிந்த வரையில் புலால் உணவு பற்றி எழுந்த கருத்து வேறுபாட்டால் சஞ்சீவி ரெட்டி தமிழக ஆளுநர் மாளிகையிலேயே தங்காமல் இருந்தது நினைவு கூரத்தக்கது. ஆன்மீகர்கட்கு மரக்கறி உணவே சிறந்தது என்பதையும் மறக்கவோ மறுக்கவோ முடியாது! ந. ச. எவ்வாறானும் கருணாநிதி கண்டிப்பாக மதுவிலக்கைப் பின்பற்றியதைப் பார்த்தேன். அத்துடன்