பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 போய் விடலாமா ? என்றார். இவ்வாறு சொல்லிவிட்டு மாபெரும் பெண்பாற் புலவர் அவ்வையாரின் வாசகம் ஒன்றை உள்ளத்தில் தைக்கும்படி உதிர்த்தார். மதியாதார் தம் வாசல்தமை மிதியோம்'. ஒரு மணித்துளி பொறுத்துக் கொள்ளுமாறு திரு. கருணாநிதியிடம் பணிவுடன் கேட்டுக் கொண்டேன். அதற்குள் விழா அமைப்பாளர்களும் பத்மாவின் அண்ணனும் ஓடோடி வந்தனர். முகமலர்ந்து (முகமலர ந. ச. வரவேற்றனர்; நிலைமை நேராகியது: தப்பித்தோம். திரு. கருணாநிதியின் ஆளுமை, முழுக்க முழுக்க திருக்குறளும், பழந்தமிழ் இலக்கியங்களும், அரசியலும், தி.மு.கவும் மட்டும் அல்ல; பரிவும் அன்பும் நிறைந்த அவர் அடிக்கடி தன் குழுவைச் சார்ந்தவர்களின் நலங்களைக் கேட்டறிந்து கொண்டதுதான். ஒரு முறை பழைய நிகழ்ச் சிகளை நினைவு கூரும் பாங்கில் ஒருமுறை அவர் தமது ஆரம்ப இளமைக் காலத்தின் அடித்தள நிலையில் தமது இயக்கத்தைப் பரப்பப் பாடுபட்டபோது விடியற்காலை இரண்டு அல்லது மூன்று மணி வரை கூட உழைத்துவிட்டு நூல்களும் தாள்களும் சூழக்கிடக்கும் நிலையிலேயே துரங்கியதைச் சொன்னார். ஆம். அது தன் கட்டுப்பாடும் உறுதிப்பாடும் மிக்க மலையேறும் முயற்சி. இந்தியாவில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு மேற் படிப்புப் பற்றி எண்ணிக்கொண்டிருந்த என் மகள் அப்போது என்னுடன் இருந்தாள். இதை அறிந்ததும் திரு. கருணாநிதி புகழ்பெற்ற கொலோன் கிறித்தவ ஆலயத்தைக் காணச் சென்றபோது என்மகளையும் அழைத்து வருமாறு அன்புடன் கூறினார். (பணிமுறை இல்லாத் தனிமுறை: ந.ச. ) அதைவிட அவ்வாறு நான் அழைத்துச் சென்றபோது திருமதி தயாளு அம்மாள் தமிழ கத்திற்குத் திரும்பும்போது குழந்தைகட்குக் கொடுக்க வாங்கிய பரிசுப் பொருள்களில் ஒன்றை என் மகளுக்குத் தந்தபோது என் நெஞ்சம் நெகிழ்ந்நது. (திரு. கருணாநிதி திருமதி தயாளு)