பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16-y காட்டிய பரிவைக்கண்டு களித்த காதல் பறவையானேன் நான் என்றால் மிகையாகாது. 1987-ம் ஆண்டில் பேராசிரியர் பல்கலைக் கழகத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஏறக்குறைய கலைஞர் நிகழ்ச்சிகளில் எல்லாம் பங்கு பெற்றார். கலைஞரின் ஒ வ் .ெ வாரு பேச்சையும் பேராசிரியர் ந. சஞ்சீவி ரசித்து என்னிடம் உரையாடுவார். கலைஞரின் பேச்சாற்றல், திட்ப நுட்பத்துடன், அரசியல் இலக்கியம் அளவுடன் கலந்து எதிர் காலத் தமிழர் வாழ்வு சிறந்தோங்கும் உயர்ந்த நோக்குடன் தென்றலாக உலா வருவதை உணர்ந்த பேராசிரியர் ந. சஞ்சீவி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. 1988.ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பேராசிரியர் 20-ம் தேதி பல்கலைக் கழகத்திற்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இறுதியாகப் பேசினார். 22-ம் தேதி, அதிகாலையில் இவ்வுலகத்தை விட்டு ஒய்வு பெற்றுவிட்டார். 22-ம் தேதி இந்த செய்தி எனக்கு எட்டவில்லை. பல்கலைக்கழகத்திற்குச் சென்று விடுகிறேன். தமிழினத் தலைவருக்குச் செய்தி எட்டுகிறது; அதிர்ச்சி அடைகிறார். தலைவரின் உதவியாளர் திரு. சண்முக நாதன், என்னிடம் இந்தச் செய்தியை அறிவித் தவுடன் கலங்கினேன்; கதறினேன். தலைவர் கலைஞர் டாக்டர் ந. சஞ்சீவி வீட்டிற்கு விரைகிறார். பேராசிரியர் குடும்பத்திற்கும் எனக்கும் ஆறுதல் கூறுகிறார். சில மாதங்கள் நகர்கின்றன. 1989-ம் ஆண்டு சனவர் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகின்றது. திராவிடர் இயக்க வரலாற்றிலும், தமிழக வரலாற்றி லும் எந்தவொரு தலைவரும் சந்திக்க இயலாத கடும் எதிர்ப்பையும், கொடுஞ் சிறைவாசத்தையும் நெஞ்சுரத் துடன் சந்தித்து வெற்றி கண்ட கலைஞரின் ஆட்சி தமிழகத் தில் மலர்கிறது. தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணா வும் காட்டிய நெறிமுறைகளின் அடிப்படையில் கடந்த 50 ஆண்டுகளாக நிறைவான பணியை அயராத உழைப்பின் மூலம் தமிழர்களுக்குத் துவளாது தொண்டு