பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரறிஞர் புகழ் பெரும் கலைஞர் ! o பேரறிஞர் அண்ணாவிடம் இருந்த பெரும் பண்புகளுள் எல்லாம் தலைசிறந்தது திறமையைப் பாராட்டும் திறம், கொஞ்சம்கூட அழுக்காறு இல்லாத அவர் நெஞ்சத்தில் "தாழ்வு மனப்பான்மை எப்போதும் இருந்தது இல்லை; பிறரைப் புகழ்வதால்-போற்றுவதால்-அவர்கள் வளர்ந்து விடுவார்களே என்ற அச்சம் அவருக்கு அணுவளவும் கிடையாது. காரணம் (1) தன்னம்பிக்கை; (2) தனி மரம் தோப்பாகாது என்ற தெளிவு. தன்னை அரசியல் முதலிய துறைகளில் முற்றிலும் சாராதவரிடமும் திறம் கண்டு பாராட்டும் திறம் அவர்க்கு இருந்ததாலேயே அவர் பலர் புகழ் - ஏன்? பகைவர் புகழ் - பரிசினையும் பெற்றார். தன்னை முற்றிலும் சாராதவரிடமே சார்ந்திருக்கும் திறங் களைக் கண்டு சாற்றும்-போற்றும், புலமை நலமும் பண்பு நலமும் அவர்க்கு இருந்தது என்றால் தன்னைச் சார்ந்தவர் களின் தனித் திறமைகளைப் போற்றுவதில் பேரறிஞர் அண்ணா இன்னொருவருக்குத் தம்பி ஆவாரோ? ஒரு சிறந்த இலக்கியத் திறனாய்வு எடுத்துக்காட்டின் வாயிலாக இவ்வுண்மையை உலகறியச் செய்வதே இக்கட்டுரையின் நோக்கம். 2 பெருங்கலைஞர் - இன்றைய நம் முதல்வர் படிப்படி யாக வளர்ந்தவர்; படித்துப் படித்து வளர்ந்தவர் . தம்பி உடையான் படைக்கஞ்சான்’ என்னும் பழஞ் சொல்லுக்கு

  • தென்னகம் அண்ணா பிறந்தநாள் சிறப்பு மலரில்

வெளி வந்த கட்டுரை (17.9-1972), 3.223-2