பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 எல்லாத் துறைகளிலும் புத்துரை காண்பவர். இந்திய விடுதலை இயக்க வரலாற்றில் முதல் பெரு மாறுதலை ஏற்படுத்தியவர் திலகர் எனலாம்; அவரை அடுத்து காந்தி அடிகள். இவ்விரு அனைத்திந்தியப் பெருமக்களை அடுத்துத் தமிழக வரலாற்றில் தனி மாறுதல்களை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார் ஈ. வெ. ரா. அவர் செய்த மாறுதலையும் இசப்பனிட்டவர் பேரறிஞர் அண்ணா அவர்களே. அவரை அடியொற்றி அரசியல் பணியும் கலைப்பணியும் செய்யும் ஆற்றல் படைத்தவர் நம் முதல்வர் - டாக்டர் கலைஞர். இவ்வுண்மைக்கு இலக்கியத் துறையில் சிறந்ததோர் எடுத்துக்காட்டாக இருப்பது சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்' என்னும் நூலாகும். இந்நூலின் ஆங்கில ஆக்கம் இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டின்போது வெளி யிடப்பெற்றது. அதற்கோர் அழகிய ஆங்கில முன்னுரையை (9.1.58 இல்) அளித்துள்ளார் பேரறிஞர் அண்ணா. அம் முன்னுரையின் தமிழாக்கம் இது என்ற குறிப்புடன் தமிழ் நூல் காட்சி அளிக்கிறது. அக்குறிப்பால் அத்தமி ழாக்கம் நேரடியாக அண்ணா செய்யவில்லை என்று தோன்றுகிறது. ஆனால் தக்கார் ஒருவரால் . அண்ணாவின் உணர்வுகளுள் ஊறிய ஒருவரால் - அது ஆக்கப்பட்டு அவர் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் என்பதில் ஐயம் இல்லை. மூலத்தை வெல்லும் முத்தமிழ்ச் சுவையோடு அமைந்துள்ள இத்தமிழாக்கத்தின் துணை கொண்டே இப்போது பேரறிஞர் புகழ் கலைஞர்' பெருமையைக் காண்டோம், 3 பேரறிஞர் அண்ணாவின் தமிழாக்க முன்னுரையில் காணப்படும் உணர்வுகளுள் எல்லாம் தலையாயது அவர் இளங்கோவின் இலக்கியத்தைத் தன் தம்பியின் வழியாக வும் கண்டு காட்டுவதே ஆகும். ஆம், பேரறிஞர் அண்ணாவின் முன்னுரையில் இரு பெருங் கூறுகளைக் காணலாம்; ஒன்று, இளங்கோவின்