பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 பெருமை; மற்றொன்று, தன் தம்பி கலைஞரின் தனித் திறமை. இவ்விரண்டுள், இக்கட்டுரையில், பேரறிஞர் அண்ணா தன் தம்பி பெருங்கலைஞரைப் பாராட்டும் திறத்தை மட்டும் பார்ப்போம். சிலப்பதிகாரச் சிந்தனையிலேயே நெடுந்தொலைவு சென்றுவிட்ட பேரறிஞர் அண்ணா திடீரென அந் நினைவுகள் தமக்கு உடனடியாகத் தோன்றக் காரணமா யிருந்த கலைஞரின் சிலப்பதிகார உரைநடை நாடக ஆக்கத்தை நினைவு கூர்கிறார். பயனிலை”யை இந்த "எழுவாய் மொழிகளில் காணலாம் : 'சேரமான் தம்பி தந்த சிலப்பதிகாரத்தைஎன் தம்பி கருணாநிதி-தனது வளமிகு செந்தமிழ்ச் சொல்திறத்தால் நாடகமாகத் தருவது பொருத்த மானதே. கருணாநிதியின் தமிழ் ஆளுந்திறன் பாத் திரங்களைப் படைக்கும் உயர் தனி ஆற்றல் ஊரும் உலகும் அறிந்தது; அறிந்து மகிழ்ந்தது; மகிழ்ந்து பாராட்டியது. அத்திறன் - சிலப்பதிகாரத்தை அவர் நாடக உருவில் ஆக்குவதற்குரிய உரிமையைத் தருகிறது. அக்காவியத்தின் உயர்தரத்தை அ ப் படி .ே ய வைத்துக்கொண்டு சில நிகழ்ச்சிகளை மாற்றியிருக் கிறார். நம்மால் விளக்கமளிக்க முடியாதது போலவும் நமக்குத் தேவையில்லாதது போலவும் தோன்றுகின்ற சம்பவங்கள் சிலவற்றிற்குக் காரண காரியத் தொடர்புடையதும் நம்பத்தக்கதுமான மாற்றங்களைச் செய்திருக்கிறார். கருணாநிதி எழுதியுள்ள இந்நாடக நூாவில் கிரேக்க வணிகன் என்னும் பாத்திரம் வருகிறது. கோவலனை மாதவி தன் மாளிகைக்கு அழைத்துச் செல்லும் காட்சிக்கு அந்தப் பாத்திரம் ஒரு சாதன மாக கருவியாக அமைகிறது.