பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 இது கோவலனின் செயலுக்குப் பொருத்த மான விளக்கமாகும் ! கோவலன் மகிழ்ச்சியும் களியாட்டமும் வேண்டி மாதவி வீட்டிற்குச் செல்லவில்லை. தமிழ்நாட்டின் பெயரைக் காக்க-தமிழ் அணங்கு ஒரு கிரேக்கக் கிழவன் பிடியில் விழாம லிருக்க - கோவலன் செயற்பட்டதாக அக்காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது : தோங்கள் ஏன் ஒரு முறை மாதவியைச் சந்தித்து அடைய முடியாத பொருளைப் பற்றி ஏங்காதே என அறிவுரை கூறி அவள் மனத்தை மாற்றக்கூடாது?’’ இது மாதவி இல்லம் போக விரும்பாத கோவலனிடம் கண்ணகி விடுத்த வேண்டுகோள் ! மாதவியின் அழகுதரும் நெறி மயக்கத்தால் எழுந்த உணர்ச்சிப் பிழம்பல்ல - கோவலனை மாதவியிடம் சேர்த்தது, கோவலன் மாதவியிடம் கலையின் குறை. வில்லா நிறையுருவைக் கண்டான் ; வேறொன் நையுமல்ல : கோவலன் தானே உருவாக்கிக் கொள்ளாத சூழ்நிலைதான் கோவலனை மாதவி, இல்லத்திற்கு அழைத்துச் சென்றது. அவன் அறிவுரை கூற அங்குச் சென்றான். ஆனால் இசைமயமான புதுவாழ்வின் துணைவ னாக அங்கே இருந்து விட்டான். 登 ஃ ஃ