பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவர் கலைஞர் தமிழ் மக்கள் 'தெய்வம்' ஐயப் படாஅ தகத்த துணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல் (குறள். 702) பல்கலைத் தலைவர்.கலைஞர்.டாக்டர் மு. கருணாநிதி அவர்களை யான் கடந்த கால் நூற்றாண்டுக் காலமாகப் பார்த்தும் படித்தும் கேட்டும், இப்போது அவ்வப்போது . சிறிது பழகியும் அறிவேன். யான் உலக உணர்வு . ஏன் ? . பலவுலக அகிலாண்ட (Universal) உணர்வுடையவன். ஆயினும் என் தாய் மொழிக்கும் அம்மொழி வழங்கும் மாநிலத்திற்கும் அம்மொழி பேசும் மக்கட்கும் ஆற்ற வேண்டிய கடமை களை மறக்க முடியாதவன், மறக்கக் கூடாதவன். மனிதக் கடமை - பண்பு - என்பதால். இதற்குக் காரணம் காந்தி அடிகளின் தேசியமும் தெய்வீகமுமே. இதை என் உள்ளத்தில் செயலாக்கம் பெறச் செய்தவர் இந்திய விடுதலைக்கு (1947) முன்பே . சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானம். சில கருத்து வேறுபாடுகள் இருப் பினும் ம. பொ. சி. யின் இந்த வழிகாட்டலுக்கு என்றும் தன்றியுடையேன். எந்த ஒரு தலைசிறந்த கலைஞரையும் . மனிதரையும் போலவே டாக்டர் கலைஞரும் அனைத்துலக - பலவுலக அகிலாண்ட (Universal) உணர்வினரே. இது அவர் தம்

  • எதிரொலி - கலைஞர் பொதுவாழ்வுப் பொன்விழா

மலரில் வெளிவந்த கட்டுரை (1988)