பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 யால் கதைத் தமிழால்-தமிழர் நெஞ்சங்களில் தனியிடம் பெற்றவர். இவ்விருவரையும் துணை வேந்தராக்கிய பெருஞ்செயல் இன்பத் தமிழகத்தின் உயர் கல்வியின் மறுமலர்ச்சிக்கு நம் கலைஞர் தந்த நல்விழிகள் என்று என்றென்றும் போற்றப்படல் உறுதி. છઠે ஃ છઠે கலைஞர் வளர்க்கும் தமிழ் கற்கண்டுத் தமிழ். இத்தமிழ் வளர்க்கும் கைக்கு இந்த ஆண்டு தமிழ் எழுத்தாளர் சங்கம் கேடயம் தர முடிவெடுத்திருப்பது மெத்த பொருத்தம், பேரறிஞர் அண்ணாவுக்குக் கேடயம் வழங்கியதை அடுத்து, கலைஞருக்கு வழங்குவதும் கடவுள் பொருத்தம். ੱ: ઈ. 6% கலைஞரின் எழுத்தோவியங்களும் பேச்சோவியங்களும் ஆண்டுக்கொரு தொகுப்பாகவேனும் வெளிவர ஏற்பாடுகள் செய்வதே நற்றமிழ் உலகம் அவர்க்கு ஆற்றவல்ல எளிய நன்றிக் கடனாகும். @ 砂 ஃ t> 9愛 இன்னும் இரண்டு ஆண்டுகளில் நம் அருமைத் தமிழக முதல்வரின்-கலைஞரின் பொன்விழா வர இருக்கிறது. அதை ஒட்டியேனும் தமிழ் மானம் காத்த-தமிழர் மானம் காத்த கலைஞர் தலைவருக்குச் செமினி சதுக்கத்தில் பொன் விழாப் பொற்சிலை எடுப்பது பொருத்தமாகும். கலைஞரின் பொன்விழாவைத் தமிழ் நாட்டின் தேசியப் பெருவிழாவாகக் கொண்டாடுவதற்குத் திட்டமிடும் வகையிலேயோ இந்த ஆண்டுவிழா அமைவதும் இன்றியமையாதது. கலைஞரின் பொன்விழாவை ஒ ட் டி-அண்ணாமலை - மதுரை - சென்னை ஆகிய பல்கலைக் கழகங்களும் அவருக்கு டோக்டர் பட்டம் வழங்கிச் சிறப்புச் செய்யவேண்டும் என்பதும் என் பேரவா. உயர் கல்வித் துறையிலும் இலவசக் கல்வியை ஊட்டிய கண்மணிக்கு -அண்ணன் தயங்கியதையும் தயங்காமல் செய்த அருந்தம்பிக்குஇந்தத் தமிழ் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் ஏழேழ்