பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிக்கட்சியின் சேதி 1 அண்மையில் வெளிவந்த சென்னைப் பல்கலைக் கழகத்தின் 44 நூல்கள் வெளியீட்டு விழாவில் மாண்புமிகு முதல்வர்-டாக்டர்-கலைஞர் அவர்கள் புதுமைத் துணிவு நிறைந்த ஒரு கருத்தைப் புலப்படுத்தினார்கள். அது நம் நாட்டின்-தம் கால-அரசியல் கட்சிகளையும் நாம் ஆராய வேண்டும் என்பதாகும். இத்தகைய ஆராய்ச்சிகளேதிறனாய்வுகளே-நடப்பு அரசியலை மேலும் நலம்பெறச் செய்யும் என்னும் பேருண்மை இதனால் புது வாழ்வு பெறும். முதல்வரின் முத்தாய்ப்பான கருத்தை முழு மனதுடன் போற்றும் முதல் முயற்சியாகவே இவ்வெளிய ஆய்வுக் கட்டுரையை அமைக்க அளாவுகிறேன். 2 தமிழ்நாட்டின் தனிச் சிறப்பு அது இந்தியாவின் பிற பகுதிகளைப் போல ஆரியத்துக்கு முழு அடிமை ஆகாமையே ஆகும். இந்தத் தனித் திராவிடத் தன்மைக்குத் தந்தை தொல்காப்பியரே. அவர் வடமொழி ஒலியை அப்படியே தமிழில் வழங்கக் கூடாது; தமிழாக்கியே தமிழில் வழங்க வேண்டும் என்று இ ட் ட தொல்லாணையே - நல் லாணையே-தனித் தமிழ் வெறியை இன்றளவும் வாழ் வித்து வருகிறது. இத்தனித் தமிழ்மொழி-பண்பாட்டுப் பற்றுக்குப் பல சிறந்த சான்றுகளைச் சங்க நூல்களிலும்சிலம்பிலும் மேகலையிலும்-திருமுறைகளிலும் பிரபந்தங் களிலும் -வீர சைவ நூல்களிலும் -மறைமலை அடிகளார் நூல்களிலும் காணலாம். இவ்வாறு இலக்கிய-சமயஎல்லையில் மட்டுமே பெரிதும் இருந்த தனித்தமிழ்