பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வளர்ச்சிக்குப் புதுவாழ்வு தரப்பிறந்த அரசியல் இயக்கமே நீதிக்கட்சி இயக்கம். அரசியல் கருவி கொண்டன்றி மொழியையோ மொழிவழிப்பட்ட இனத்தையோ காக்க இயலாது என்று தெளிவின் விளைவே நீதிக் கட்சியின் இயக்கம். 3 இனி, இவ்வியக்கத்தின் தோற்றத்தையும் அது நிகழ்த்திய மாற்றங்களையும் வரலாற்றுக் கண்கொண்டு ஆராய்வோம். நீதிக்கட்சி 1916-இல் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற பெயரில் (இந்திய தேசிய காங்கிரசு தோன்றிய 31 ஆண்டுகட்குப் பின்) பிறந்தது. இக்கட்சியின் தாயும் தந்தையுமாய் விளங்கியோர் அறிஞர் (டாக்டர்) நாயரும். அருளாளர்-வெள்ளுடை வேந்தர்-சர். தியாகராயரும். இக்கட்சி தோன்றிய நான்கே ஆண்டுகளில் 1920-இல் அந் நாளைய மாநிலத்தில் இரட்டை ஆட்சி அடிப்படையில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் நீதிக் கட்சி பெரு வெற்றி பெற்றுப் பேரும் புகழும் எய்தியது. இந்நிலை இந்திய தேசிய காங்கிரசு தோன்றி 31 ஆண்டு கட்குப்பின் இருந்தது ஆழ்ந்து ஆராயத்தக்கது. மூன்றாண்டு ஆட்சிக்குப்பின் மீண்டும் 1923-இல் நடந்த தேர்தலில் நீதிக் கட்சியே பெருவெற்றி கண்டது. (இந்நாளில் இந்திய அரசியலில் காங்கிரசில் காந்தி அடிகளும் தலைமை பெற்று விட்டார் என்பதும் எண்ணத் தக்கது). இந்த நீதிக்கட்சி ஆட்சியில்தான் முழு அளவில் சென்னை ஆந்திரம் அண்ணா மலைப் பல்கலைக் கழகச் சட்டங்கள் நிறைவேறின. 1926-இல் இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டமும் நிறைவேறியது. 1928-ஆம் ஆண்டில் நடைபெற்ற மூன்றாவது பொதுத் தேர்தலில் நீதிக்கட்சி நேரடிப் பெரும்பான்மை பலம் பெறாவிடினும் சூழ்நிலைகள் காரணமாக அதுவே ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. நான்காண்டு நல்லாட்சிக்குப்பின்