பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 1930-இல் நடைபெற்ற நான்காவது பொதுத் தேர்தலிலும் நீதிக்கட்சியே பெரும்பான்மை பலம் பெற்றது. ஏழாண்டுக் குப்பின் 1937-இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் நீதிக் கட்சிக்கு ஒரு சில இடங்களே கிடைத்தன. காங்கிரசே வென்றது. முப்பதாண்டுக் காலத்திற்குப்பின் இன்று காலச் சக்கரம் மறுபடியும் தலைகீழாகச் சுழன்று விட்டதைக் காண்றோம். இப்போது காங்கிரசுக்கு ஒரு சில இடங்களே கிடைத்தன என்னும் நிலை; நீதிக்கட்சியின் தீவிரப் பாராளுமன்ற வடிவமாகிய தி. மு. க. ஈடினையற்ற வெற்றி கண்டு தமிழகத்தைத் தன்குடைக் இழ்கொண்டு வந்து விட்டது. இதுபற்றி நீதிக்கட்சியின் முதுபெருந் தலைவராகிய சர். பி. டி. இராசனின் இதயத்துடிப்பு நிறைந்த மொழிகள் வருமாறு: 1937-ல் நீதிக் கட்சிக்குக் கிடைத்த தோல்வி யைவிட 1967-ல் காங்கிரசிற்குக் கிடைத்த தோல்வி மிகவும் பரிதாபமானது. சென்னைப் பாராளுமன்றத் தொகுதியில் அதற்குக் கடைசி அடி விழுந்தது. பெரிய காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு முயன்றும் இளைஞ ரான முரசொலிமாறனைத் தோற்கடிக்க முடிய வில்லை 1937-இல் இராசாசியின் தலைமையில் முதல் காங்கிரசு அரசு சென்னை மாநிலத்திற்கு ஏற்பட்டது. இராசாசியின் கட்டாய இந்தித் திணிப்புக் கொள்கையால் அது ஆட்டங் கண்டது. உலகப் போர் மூண்டதும் விடுதலை இயக்கம் காரணமாக இராசாசி பதவியை விட்டார். கட்டாய இந்தித் திட்டமே ஒழிந்தது. 1940-இல் திருவாரூரில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் தந்தை பெரியார் ஈ. வெ. ரா. நீதிக் கட்சியின் தலை வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தந்தை பெரியார் தனிப் பெரும் காங்கிரசுத் தலைவராக இருந்தவர். அக்கட்சியின்