பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 நாடு காங்கிரசே மேற்கொண்டது. ஆந்திரம் பிரிந்தது : கன்னடப் பகுதிகள் பிரிந்தன ; கேரளப் பகுதிகள் பிரிந்தன ; ஏறத்தாழ இன்றைய தமிழகம் அமைந்தது. இந்நிலையில் தந்தை பெரியார் நேரடியாகவும் பேரறிஞர் அண்ணா மறைமுகமாகவும் தந்த ஆதரவைப் பயன்படுத்திக் கொண்டு காமராசர் நாடாளும் பொறுப்பை உறுதியாகப் பிடித்துக் கொண்டார். 1757-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முதன் முதலில் தி.மு.க. நேரடியாகக் கலந்து கொண்டது. இத் தேர்தலில் அது 15 இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது. சட்டமன்றத்தில் தி.மு.க. கட்சித் தலைவராய்ப் பேரறிஞர் அண்ணா விளங்கினார். இத்தேர்தலில் பெரிய விந்தை நீதி கட்சியின் ஒரே தலைவரான சர் பி.டி. இராசன் தோற்றார் - அக்கட்சியின் பெயரால் நின்று. இதிலிருந்து நீதிக் கட்சியின் தீவிர வடிவமாகிய தி.மு.க.வே மக்கள் மன்றத்தில் செல்வாக்குப் பெறத் தொடங்கியது என்பது தெளிவாகும். ஆயினும் தந்தை பெரியோரின் தனிப் பெரும் ஆதரவைப் பெற்றிருந்தமையாலும் ஒப்பற்றப் பொதுவாழ்வு ஒழுக்கத் துய்மையாலும் பெருந்தலைவர் காமராசர் இட்டது சட்டமாய் இருந்தது தமிழ்நாட்டில்பதினைந்தாண்டுக் காலம் ! 1926-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தி. மு. க. தலைவர்கள் குறிபார்த்து சுடப்பட்டார்கள். அதன் விளை வாகப் பேரறிஞர் அண்ணா, பேராசிரியர் அன்பழகன் முதலியோர் வெற்றி வாய்ப்பை இழந்தனர். ஆனால் தி. மு. க. பலம் சட்டமன்றத்தில் 15-லிருந்து 52 ஆக உயர்ந்தது. இது தி. மு. க. செல்வாக்கு ஏறுமுகமாதலை எண்பிக்கும். ஆனால் இந்நிலையைக் காங்கிரஸ் உணர்ந்து செயல்படத் தவறியது. சிறப்பாக 1967 பொதுத் தேர் தலுக்கு முன் ஆட்சிக் கலைவல்ல பெரும் தலைவர் திரு. பக்தவத்சலம் தீவினைப் பய னாக மாணவர் கிளர்ச்சியின்போதும் அரிசிப்பற்றாக் குறையின்போதும்