பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 நடந்துகொண்ட முறையாலேயே காங்கிரசாட்சி கவிழ்ந்தது எனலாம். பொதுவாக வெளிப்படையான தீ வி ர தமிழுணர்ச்சியும் ஏழை மக்கள்பால் உண்மையாகச் செயல் வழிப்பட்ட இரக்கமும் இல்லாப் போக்கே காங்கிரசின் வீழ்ச்சியை உறுதிப்படுத்திற்று எனலாம். இதன் விளை வாகவும் தி. மு. க. திராவிடக் கழகப் பெயரால் முதல் சில ஆண்டுகளிலும் பின் தன் பெயராலும் இடையீடின்றிச் செய்து வந்த கால் நூற்றாண்டுக்கு மேற்பட்ட காங்கிரஸ் எதிர்ப்புக் கருத்துப் பரப்பாலும் (பிரச்சாரத்தாலும்) 15 - 5.2 ஆகி 1967-ல் 150 இடங்களைக் கைப்பற்றியது. இருபதாண்டுக்காலம் காங்கிரஸ் இருந்த இடத்தில் தி. மு. க. வும் தி. மு. க. இருந்த இடத்தில் காங்கிரசும் அமர்ந்தன. ஆம், இடம்மாறின. இந்தத் தலைகீழ்நிலை ஒருவகையில் நீதிக்கட்சியின் தீவிர வடிவத்தின் வெற்றியே, தெளிவாகச் சொன்னால் நீதிக்கட்சியால் கனவிலும் காண முடியாத வெற்றி இதுவெனலாம். காரணம், 1. தி. மு. க. வெற்றியின் விளைவாக (காங் கிரசுக்கு எதிராக இராசாசியின் ஆதரவு இருந்தும்) ஒரு பார்ப்பனர் கூட இல்லாத அமைச்சரவை முதன் முதலாக இந்திய வரலாற்றில்-தமிழ வரலாற்றில் அமைந்தது. 2. இந்தத் தேர்தலில் இந்தியத் தலைவர்களுக்குள்ளேயே மிக முதியவராகிய இராசாசி பேரறிஞர் அண்ணாவின் அருமை நண்பராகவும்-இந்தி எதிர்ப்பில் முன்னணி வீரராகவும் தோற்றம் தந்தார்; 3. காமராசரையும் காங் கிரசையும் கவிழ்க்கும் உள்நோக்குடன் எழுந்திருக்கக்கூடிய இந்தச் சாணக்கியத்தைப் பேரறிஞர் அண்ணா மிகத் திறமையாக ஜீரணித்தார். தம்மிடைய சாணக்கியம் தி. மு. க. விடம் பலிக்காது எனத் தெரிந்த இராசாசி மெல்ல மெல்லத் தன் வடிவத்தில் காட்சி அளிக்கலானார்.