பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 இதை உணர்த்த தமிழ் மக்கள்-ஏழை எளிய மக்கள். 1971-இல் கலைஞர் தலைமையில் ஒன்று திரண்டனர். சாதி-கல்விச் செருக்குகட்குச் சாவுமணி அடித்தனர். தி. மு. க., பேரறிஞர் அண்ணாவும் இல்லாத பேரவல நிலையில்-இராசாசியும் காமராசரும் கூட்டுச் சேர்ந்த இக்கட்டான நிலையில்-தி. மு. க.வை அரியணையில் வைத்த மாணவ சமுதாயமும் ஒரு சிறிது பிளவுபட்டுப் போன நிலையில்-முன் எப்போதும் காணா வகையில் ஒரு சில மாத ஏற்பாடுகளில் பெற்ற வெற்றி ஈடு இணையில்லாப் பெரு வெற்றியாகும். இந்த வெற்றி தமிழ்மொழியும் பார்ப்பனர் அல்லாத சமுதாயமும் ஏழை எளியோரும் பெற்ற இமய வெற்றி. இதற்காகத் தி. மு. க. தந்த ஒரே பலி மயிலைத் தொகுதியில் ம. பொ. சி. இதுகாறும் கூறிய வற்றால் நீதிக்கட்சியின் சேதி (1) தென்னிந்திய நலவுரிமை என்பதும், (2) அதன் தீவிர வடிவங்களே தி. க. வும் தி. மு. க.வும் என்பதும், (3) தி. மு. க.வின் வெற்றி அது பாராளுமன்றத் துறைக்குப் பண்பட்ட அரசியல் பேரறிஞர் அண்ணாவால் திருப்பப்பட்டதால் வந்த பயனே என்பதும், (4) பெரியாரும் பேரறிஞரும் வளர்த்த தன்மானத் திராவிட இயக்கம் தற்போது இறுதி எதிர்ப்புகளை முறியடித்துத் தமிழ்வேள்-டாக்டர்-கலைஞர் முதல்வர் அவர்கள் கையில் உறுதியாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. என்பதும் (அதிகமான்) கையில் (அவ்வை தந்த) நெல்லிக் கனியென விளங்கும்.