பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 ந. சஞ்சீவி அவர்களின் தலை மாணாக்கர் (இரு பொருளிலும்)-இளம் வள்ளுவர், முப்பால் மாமணி, குறள் இானி டாக்டர் கு மோகனராசு, அவர்கள், எனது தந்தைக்குப் பிறகும் நாங்கள் மேற்கொண்ட இப்பணிக்கு வழிகாட்டி, இசைந்து, பொறுப்பேற்று, ஊக்கமளித்து, வடிவமைத்து தரும் பாங்கு எங்கள் நெஞ்சை நெகிழ்த்து கிறது. அவர் களு க் கு நாங்கள் என்றும் நன்றி யுடையோம். எனது தந்தை வாழ்நாளில் எழுதியவை பல; அவரே வெளியிட்டவை பல; இன்னும் வெளியிடப்பட வேண்டிய வையும் தொகுக்கப்பட வேண்டியமையும் பல. இல் வெழுத்துக்களைப் புத்தக வ டி வி ல் கொண்டுவர வேண்டியது எங்கள் குடும்பக் கடமை. எனினும், இந்நூல் உருவாகக் கடந்த ஒருமாத காலம் இரவும் பகலும் பாராமல் அயராது ஒடியோடி உழைத்தவர்-இந்நூலை வெளி யிடுவது தம் தலையாய கடமை எனக் கருதி உழைத்தவர் -கைமாறு கருதாமல் உழைத்தவர்-தமிழரறிஞர்க்குச் செய்யும் தமிழ்ப்பணி என உணர்ந்து உழைத்தவர் என் அன்புக் கணவர் டாக்டர் ம. பெ. பாலசுப்பிரமணியன் அவர்கள். அவரைக் கணவராகப் பெற்றது. நான் பெற்ற பெரும் பேறு ! இந் நூ ல் அச்சாகும்போது என் கணவருட ன் உடனிருந்து உழைத்தவர்கள். டாக்டர் சா. ராசன், திரு. சி. சுப்புராசு, திரு. செல்வசேகர் ஆகியோர். அவர்கள் அனைவர்க்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கு கின்றேன். இந்நூலில் வரும் கட்டுரைகளை வெளியிட்டுதவிய தென்னகம், எதிரொலி, காஞ்சி, உரிமை வேட்கை, தமிழ்ப் பணி ஆகிய இதழ்களின் ஆசிரியர்களுக்குப் பெரிதும் நன்றி யுடையோம்,