பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 இனி, கருத்துக் கவிஞராய்-எண்ணக் கவிஞராய் விளங்கும் நம் கலைஞரின் தனிச்சிறப்புக் கவி அருமையை {Poetic Personality) siri-Leipäärgy Firsärpägir: 1. கலைஞரின் தமிழ் காக்கும் தறுகண்மை தமிழுக்குப் பகைவன் தமிழனே : அழுக்காறே அவன் தனிப்பண்பு ; பெரும் பண்பு. இதன் விளைவாகவே பாரி போன்றார் அழிவும், முடி உடை (!) மூவேந்தர் வீரத்தால் முத்தமிழ் நாடு சொத்தையாய்ப் போனதும். இன்றும் இந்த நிலை வேறு வேறு வேடங்களில்! இதை நம் கலைஞரே முன்னினும் அதிகமாக உணரும் நிலை. கூட இருந்து குழிபறிப்போரே மிகுதி. வள்ளுவர் சொல்லியது போல வாள் போல் பகையைக் கண்டு அஞ்ச வேண்டுவதில்லை; கேள் போல் பகை கண்டே அஞ்சல் வேண்டும். உடன்பிறந்தே கொல்லும் வியாதி” மாமலை மேல் இருக்கும் மருந்து, ஈராயிரம் ஆண்டு களாய்த் தன்னலத்தின் காரணமாகவே தோன்றும்இல்லை கண் உடைக்கும் அழுக்காற்றால் தமிழர் அறிவா றெல்லாம் அழிவாறாகி வருகிறது. நல்லது பொறுக்காத இந்த நஞ்சர்களால் பகைவர் படை-பலம் பெருகுவது இயற்கை; திண்டுக்கல் நம் தலைமேல் விழுவது இயற்கை. கலைஞர் உள் மனத்துள் இருக்கக்கூடிய இக் கருத்துக்கள், பகைவர்க்குத் தாழாமல் வகைகண்டு வீழாமல் பல்லுழி வாழ்கின்ற தமிழ் (8) ஆவேசத் தமிழ் மாரி (23) அடலேறு மொழித் தமிழே :- இன்பக் கடலேறு மலைத் தமிழே (70) (எண்கள் பக்க எண்கள்) என்னும் வரிகளில் பீறிடுவதைக் காணலாம். இவ் வரிகளில் அகமும் புறமும்-வீரமும் காதலும்-கடலும் மலையும்கொஞ்சிக் குலாவுதல் கோவா வாக இனிக்கிறது எனக்கு: