பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 அமோக விளைச்சல்-அண்ணா அரசின் இலட்சியமாம் அதற்கென உறுதி அளிப்போம்-கிச்சயமாய்! (3) மூன்றெழுத்து முதல்வராய் -மூலவராய்- விளங்கிய பேரறிஞர் பற்றிக் கிடைக்கும் மூன்றாவது சான்று 12.9.1989ஆம் நாள் சென்னை வாணிமகாலில் நடை பெற்ற பாரதிவிழாக் கவியரங்கில் கலைஞர் தந்த தலைமைக் கவிதையிலாகும். ஈண்டுக் கருதத்தக்க ஒரு குறிப்பு பேரறிஞர் அண்ணா வின் பிரிவாற்றாமல் கலைஞர் பெருந்தகை 9.2.69ல் கண்ணிர்க் கவிதாஞ்சலி படைத்தபின் பல மாதங்கள் கவி பாடவில்லை என்று தோன்றுகிறது. இந்நிகழ்ச்சியை அடுத்து அவர்கள் கவியரங்கக் கவிதை பாடியது-ஏழு மாதங்கள் ஏகிய பின் - 12-9-69-ல் தான். 69-ல் இந்த ஒரு முறை தவிர வேறு ஒரு முறையும் கலைஞரின் கவிக் குரலைக் கேட்க முடியவில்லை. காரணம் வெளிப்படை பாட்டுவிக்கும் பெருந்தலைவர் மறைந்துவிட்டார் : இதன் விளைவே 68-ல் எட்டுக் கவியரங்குகளில் தலைமை தாங்கிய கலைஞர் 69-ல் ஒரே கவியரங்கில் தலைமை தாங்கக் காண்கிறோம். பாரதியார் பற்றிய இந்தக் கவியரங்கில் பேரறிஞர் அண்ணா மறைந்த எட்டு மாதங்கட்குப் பின்னும் கலைஞர் உள்ளத்துள் அழுது எழுதும் எழுத்து வருமாறு: தாயாகத் தமிழாகத்-தாயகத்தில் மூத்த சேயாகத் தடைபடா அன்புருவாக - அண்ணன் கண்டவன் கான் கண்ணன் கண்டவன் பாரதி! பாரதிக்குக் கண்ணன் ! கலைஞர்க்கு அண்ணன் ! 3.222-5