பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 வங்கக் கடலருகே உறங்குகின்ற நம்அண்ணன் அடிதொழுது தொடங்குகின்றேன் தலைமையுரை! இப்பகுதியில் இரண்டாவது வரியில் காணப்படும் அடி-தலை இணைப்பு கவிதைக்கு முரணரண்: இத் தொழுகையால்-உள்ளார்ந்த அழுகையால்-விளைந்த விளைவே நேரு கண்ட ஜனநாயகம் என்ற தலைப்பில் கவிஞர் பாடியிருக்கும் அற்புதக் கவிதை. நேருவைப் பற்றி இதனினும் சிறந்த ஒரு கவிதை இந்திய இலக்கியத்திலேயே உண்டா என்று ஐயுறச் செய்யும் அரிய பெரிய கவிதை இதுவாகும். எந்தத் தேசியவாதிக்கும் கலைஞர் நேரு நெஞ்சில் இளைத்தவரில்லை என்பதற்கு இக்கவிதை அழியாப் பெருஞ் சான்றாகும். எந்த அரசியல் கட்சியாரும் இந்தப் புது ஆண்டிலிருந்தேனும் உணர்ந்து போற்ற வேண்டிய உயர்வு, என்றோ ஒரு காலத்தில் எதற்காகவோ மாறாய் இருந்தவர்கள் இன்று மனம்மாறி இருக்கும்போது அந்த மனம்-மணம்-மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டுவதே அறிவுடைமை-அருளுடைமை. எந்த ஒரு அரசியல் கட்சி நேற்று மாறாயிருப்பினும் இன்று மாறி வருபவரை மதிக்காமல் மிதிக்கிறதோ அது காலச்சுழற்சியில் வீழ்ந்து படும் இவ்வுண்மையை உணர்ந்தவர்-உரைத்தவர் பேரறிஞர் அண்ணா. ஆனால் அதை உணராத உள்ளங் களிலும் உணர்த்துபவர்-உரைப்பவர் (இரு பொருளிலும்) நம் பெருங் கலைஞர். அந்த வகையில் நேருவும் மதிக்கத் தக்க நேருவாக விளங்கும் கலைஞரையும் அவர் ஆருயிர் அண்ணனையும் அவர்கள் வழிச் செல்லும் கழகத்தையும் காந்தியும் நேரும் கண்டு களிக்க முடியாமல் காலம் சதி செய்து விட்டது நம் குறையே. இவ்வாறெல்லாம் நம்மை எண்ணச் செய்து உள்ளம் எல்லாம் உருகச் செய்வது நேருவின் பேரும் (ஆம். உண்மை யிலேயே) புகழும் விளக்கும் அப்பாடலில் வரும் பின்வரும் வரிகள்: