பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் கவிதைகளில் கருத்துப் பரப்புக் கலை என்றும் பதினாறாய் விளங்கவல்ல 16 கவிதைகளைக் கொண்ட தொகுப்பு கவியரங்கில் கலைஞர். 187பக்கங்கள் கொண்ட இந்நூலில் உள்ள கவிதைகளைப் பற்பல தலைப்பு களில்-அகலமாகவும் ஆழமாகவும்-ஆராயலாம். இது "உண்மை-வெறும் புகழ்ச்சி இல்லை". கடந்த ஒருவார காலமாக நூல் முழுதும் நூல் போல் ஊடுருவிச் செல்லும் உணர்வுகளையும் உண்மைகளையும் இனங்கண்டு வகை தொகை செய்ய முயன்றேன். கடமைகளும் கவலைகளும் தடையாயின. எனவே அம் முயற்சியைக் கைவிட்டு (இப்போதைக்கு!) பொங்கல் திருநாள் பற்றியே கலைஞர் அவர்கள் 12.1.70 ஆம் நாள் சென்னை வானொலியில் நிகழ்த்திய கவியரங்கத் தலைமையுரையில் ஒர் இயல்பை யேனும் -ஒரு கூறையேனும் ஆராயலாம் என்று எண்ணு கிறேன். பெருநிலை ஆய்வு (Macro study) முடியா விட்டால் நுண்கலை ஆய்வு (Micro study) தானே! கருத்துப்பரப்பு-பிரசாரம் இல்லாத கலையே இல்லை. ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு வகை-ஒவ்வொரு அளவு கருத்துப் பரப்புச் செய்வதற்கே பிறக்கிறது. மணி வாசகரையும் சேக்கிழாரையும் போல் கவிபாடவும் காதல் கொண்ட கலைஞராய் விளங்கும் நம் கவிஞர்-முதல்வர்தன் கட்சியை-அரசின் பணிகளை விளக்க கவியரங்கை எவ்வளவு திட்பமாகவும் நுட்பமாகவும் பயன்படுத்துகிறார் என்பதைப் பொங்கல் திருநாள் கவியரங்கத் தலைமை யுரைக் கவிதை ஒன்றனுள் மட்டுமேனும் புகுந்து பார்ப்போம்:

  • உரிமை வேட்கை-பொங்கல் மலரில் (1973) வெளிவந்த கட்டுரை.