பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 நம் கலைஞருக்குத்தான்-தன்னரசு என்ற தருக்கு" இல்லை அது மட்டுமன்று வேறு எதுமாட்டும் சிந்தனை யற்றோர் சிந்திக்கத் தக்கது : உரம் மலிவாய் வழங்குதற்கும் - ஈகைக் கரம் வேண்டுமன்றோ ? அதனைத் தரமறிந்து அண்ணன் தந்துவிட்டே போயுள்ளார். இறுதி அடியில் ஈற்றயல் சீரில் இருக்கும் ஏகாரம் இரக்க இதயம் படைத்தார்க்கு ஆகாரம் அன்றோ ? அண்ணன் கொடுக்காமல் போகவில்லை-கொடுத்துவிட்டே போயுள் ளார் என்பதும்-கொடுத்த அண்ணன் போய்விட்டாரே என்பதும் ஏகாரத்தால் விளங்குகின்றனவன்றோ ? 逸 ੀ। బీర & செவி கைக்கச் சொற்பொறுத்தல் நாடாள்வோர்க்கு இருக்க வேண்டிய நற்பண்பு-சொற்பண்பு. ஆம், புடம் போடப்போட ஒளிவீசும் பண்பு. தன்னை அல்லது தமரைப் பற்றிச் சொல்லப்படும் குறைகள் உண்மையா என்று எப்போதும் ஆராய வேண்டும். இது ஒவ்வொருவர் கடமையும். உண்மையாக இருந்தால் சிந்தித்துத்திருந்த வேண்டும்; பொய்யாக இருந்தால் பொய்க்கும் உரிய காரணங்களை ஒரளவேனும் எண்ணிச் சிரித்து ஒதுக்க வேண்டும் : நம் கலைஞர் முதல்வரோ சிந்தித்து! சிரித்து ஒதுக்கவில்லை; சிந்து சிந்துகிறார் : சிரம் ஆட்டி ன்மை ஏற்காமல் சிலர் ஒட்டைகளைக் காட்டுகின்றார்-காத சுரம் காட்டும் ஓட்டையெல்லாம் கல்லிசைக்கே என்றிடுவேன்.