பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 இவ்வளவு பாடுபடும் கலைஞர்-அறிஞர் வழி ஆட்சி யாளர்-இந்தப் பாட்டுக்கெல்லாம் எதிர்பார்ப்பது என்ன தெரியுமோ? எதிரிகள் பாட்டும் பாடும் பாட்டு அன்று: (நானும் கலைஞரைப் போல நடைபோட்டுப் பார்க்கிறேன்! ஆமாம். நடையைப் போட்டு’ப் பார்க்கிறேன்!) இதோ கலைஞரின் ஏக்கம்: இவையெல்லாம் புகழ்ந்துரைத்துப் பொங்கல் காளில் தொகை தொகையாய் மாலை வேண்டாம் பரிசு வேண்டாம் அவைப் புலவீர் அழகுறவே ஓர்பாட்டு நீர்பாடின் பகைப்புலம் ஒழித்த பாண்டியன் போல் நிமிர்ந்து கிற்பேன் இன்று நாடெல்லாம்-உலகமெல்லாம், ஏன்?. நாவெல் லாம்-உள்ளமெல்லாம் ஓங்கி வருவது-வளருவது வன் முறை? இந்நிலையை எண்ணுகிறார் கலைஞர். மற. வீரத்தை எதிர்த்து அவர்தம் அறவீரம் பொங்குகிறது. இதோ பொங்கல் திருநாளில் அந்தக் கருத்துக் கவிதைப் பொங்கல் : குகைப் புலியை முறத்தாலே எதிர்த்த நாட்டில் திகைப்புற்று கிற்போமோ வன்முறையை வீழ்த்திக் காட்.: புகைக்கருத்துப் போக்கிவிட்டுப் புதுக்கருத்துப் போற்றிடுவோம் பொங்கல் நாளில்: இவ்வாறு வன்முறைக்கு எதிராக 'முரசொலி செய்த நம் முதல்வர் மூன்றாண்டுகட்கு முன்பே (1970) இந்த ஆண்டுப் பொங்கல் திருநாளில் (1973)சொல்ல வேண்டியநாம் ஒவ்வொருவரும் சொல்ல வேண்டிய-இந்திராவும் இந்தியாவும் கேட்க-இல்லை - கேளாமலே சொல்ல வேண்டிய கருத்தை-எவ்வளவு அழகாகவும் ஆணித்தர மாகவும் சொல்கிறார் பாருங்கள்: