பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் கவிதைகளில் பாட்டாளியின் பெருமை இன்பத் தமிழ் இலக்கியம் எழுபதுகள் (Seventias} எழுந்ததும் பெற்ற பெரும் பேறுகளுள் ஒன்று கவியரங்கில் கலைஞர்" என்னும் தொகுப்பு. பல்வேறு தலைப்புகளில் நம் மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் அவ்வப்போது பாட்டாளிக் கவியரங்குகட்குத் தலைமை ஏற்றுப் பாடிய கவிதைகளின் தொகுப்பே இந் நூல். பற்பல கோணங்களிலிருந்து ஆ ர ா ப் ந் து மகிழ்ந்து மதிப்பீடு செய்யும் வாய்ப்பினைத் தமிழ்நாட்டு இதழ்கள் எனக்குத் தயவுடன் தந்து வருகின்றன. மேதினி எல்லாம் மேவிடும் மே தினம் ஒட்டி(இந்த நடை கலைஞரின் கவிதைகளின் தாக்குதலின் எளிய விளைவோ!) வெளிவர விருக்கும் உரிமை வேட்கை மலருக்கு மணம் செய்ய ஒரு கட்டுரையைக் கேட்டபோது என் ஆண்மைகொள் ஆராய்ச்சிக்குரிய கருவூலமாய் விளங்கும் கலைஞரின் கவிதை களே மீண்டும் என் நினைவிற்கு வந்தன. அதனால் அக் கண்கொண்டே இத்தொகுப்பில் சிலமணி நேரம் செலவழித் தேன். அதிக நேரம் செலவழிக்க ஆர்வம் இருந்தும் அமயம் இல்லை. அருமை நண்பர் எனக்குக் கட்டளை தந்தாரே தவிர காலம் தரவில்லை. கிடைத்த நேரத்தில் கிடைத்த வரையிலேயே என்னை மெய்சிலிர்க்க வைக்கும் 16 பகுதிகள் கிடைத்தன. பாராளும் கலைஞரின் பாட்டாளி உணர்வைப் பார்ப்பதற்கும் பகிர்வதற்கும். அவற்றை மட்டுமே துணை யாகக் கொண்டு இவ்விலக்கியப் பகுதிகள் அமைந்துள்ள முறைப்படியே கலைஞரை அவர்க்குப் பாட்டாளியர்பால் உள்ள அருளுடைமையைப் பார்க்க முனைகிறேன்.

  • உரிமை வேட்கை-2-வது ஆண்டு நிறைவு மேதின மலரில் (1972) வெனி வந்த கட்டுரை.