பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை மாண்புமிகு பேராசிரியர் க. அன்பழகன் (தமிழக கல்வி அமைச்சர்) பேராசிரியர் டாக்டர் ந. சஞ்சீவி பல்லாண்டு காலம் பழந்தமிழ் பயின்று, பயிற்றுவித்து. தெளிந்து தெளிவுரைகளாக்கி, ஆய்விற் சிறந்த கட்டுரைகளாக்கி - தமிழ்த் தொண்டு ஆற்றியவர். பச்சையப்பன் கல்லூரியில் பயின்ற இளமை நாள் தொடங்கி, ஒரு குறிக் கோளுடன் செயற்படும் ஆர்வத்தின ராகி, தமிழ் வளர்ச்சிக்கும் - தமிழர் நிலை உயர்வுக்கும் ஏற்றவற்றையே எண்ணத்தில் தேக்கி, அதனைப் பரப்பிடும் பணியினை ஓயாது நிகழ்த்தியவர். எதையும் கூர்ந்து நோக்கி, உண்மை நாடி, நன்மை யைக் கண்டு நாட்டவர்க்கு உரைக்கும் நாவினர். துவக் கத்தில் அரசியல் வழியில் வேறுபட்ட சிந்தனையுடைய வராய்ச் செயற்படினும் கால ஓட்டத்தில் பேரறிஞர் அண்ணாவின் பெருந்தகைமையினையும், பல துறை ஆற்றலையும் உணர்ந்து வியந்தவர். அதே வழியில்*அண்ணாவின் தம்பி’ என்னும் அடைமொழிக்கு முற்றிலும் தம்மைத் தகுதியுடையவராக்கிக் கொண்ட - அவரது மொழியில் கூறுவதானால், கலைஞரை-பெருங் கலைஞரைப் பலகாலும் அவரது எழுத்தில் கண்டும், மேடையில் கேட்டும், பின்னர் வாய்ப்பு நேர்ந்துழி நேரில் உறைகடியும் அவரது ஆற்றலை உணர்ந்து போற்றுதற்கு முன் வந்தவர்.