பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 பார்த்திருக்கும் கலை உழவர்-கடமை மறவர் நம் கவிஞர் முதல்வர் என்பது விளங்கும் அல்லவா? ஆம்! அவருடைய சொற்களே கற்களையும் கனிவிக்கும்! இனி ஒரு வகையில் இந்தக் கவிதையிலேதான் நம் முதல்வரின் மூலமான நுண்ணறிவும் நூலறிவும் போட்டி விட்டுக் கொண்டு ஒளி வழங்குகின்றன என்று புகலலாம். இதோ சான்று : வறுமையிலே கற்பனைகள் செழிக்குமென்பார்: முத்து முத்தாய்க் கவிபிறக்கும் என கவில்வார் சத்தி முத்தப் புலவரையும் சாத்தக் கவிராயரையும் கித்த கித்தம் அலைகின்ற பாணரையும் கொத்துக் கொத்தாய் உதாரணங்கள் தக்திடுவார் செழிப்பினிலே கவிபிறந்த கதையுந்தான் மெத்தவுண்டு மன்னன் அதிவீரராமன் என்ன , தென்னவனாம் பாண்டிய வேந்தன் என்ன; கன்னல்மொழிக் கவிப் புலவச் சிங்கமன்றோ ? வறுமைவினால் கவிபெருகும் என்று சொல்வோர் வளமையினை ஏழைக்கு அனுமதியாப் பெருஞ்செல்வர் (ப. 132) இறுதி இரண்டு அடிகளில்தான் கலைஞர் கல் நெஞ்சர்க்குக் கொடுக்கும் அடிகள்தான் ஆயிரமாயிரம் எனலாம் அன்றோ? 3 முன்னர்த் தமிழ் வட்டக் கவியரங்கத் தலைமையுரைக் கவிதையில் கலைஞர் தந்திருக்கும் வரிகளை அறிவோம். அவை இவை : மறவர் பெருமைக்குப் போர்க்களமே வட்டம் உழவர் ஏருக்கு விளைகிலமே வட்டம் (ப. 73)